• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா : ரஷ்யாவில் ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

கொரோனா : ரஷ்யாவில் ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

விளாதிமிர் புடீன்

விளாதிமிர் புடீன்

ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.

  • Share this:
    ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கே ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புடீன் அறிவித்துள்ளார். அங்கே, ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததே தற்போது வைரஸ் பரவல் அதிகரித்தற்குக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்ததாத 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூகப்பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடீன் அறிவித்துள்ளார். அதன்படி, ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து, நவம்பர் 7ஆம் தேதி வரை ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது. ரஷ்யர்கள் பொறுப்பை உணர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Must Read : கொரோனா தடுப்பூசியில் சாதனை! - 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா

    ரஷ்யாவில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாடடில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,25,325 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: