ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த உலகின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீரர்...

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த உலகின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீரர்...

Best Sniper in World | ஆப்கானிஸ்தானில் 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் பணியாற்றியபோது, ஸ்னைப்பர் வாலி தொடர்பான தகவல்கள் வைரலாகின.

Best Sniper in World | ஆப்கானிஸ்தானில் 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் பணியாற்றியபோது, ஸ்னைப்பர் வாலி தொடர்பான தகவல்கள் வைரலாகின.

Best Sniper in World | ஆப்கானிஸ்தானில் 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் பணியாற்றியபோது, ஸ்னைப்பர் வாலி தொடர்பான தகவல்கள் வைரலாகின.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 40 வீரர்களை சுட்டுக் கொல்லும் அளவுக்கு திறமை பெற்ற ஸ்னைப்பர் 'வாலி' என்ற போர் வீரர் உக்ரைன் ராணுவத்தில் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

கடந்த மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. இன்றைக்கு தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் முள்னேற ஆரம்பித்துள்ளன. உக்ரைன் தொடர்ந்து எதிர்த்தாக்குதல் நடத்தி வந்தாலும், வலுவான ரஷ்ய படைகளுக்கு முன்பு அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இதுவரை இழந்த பகுதிகளில் எதனையும் உக்ரைன் ராணுவத்தால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தில் இடம்பெற்றுள்ள உலகின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீரராக கருதப்படும் 'வாலி' குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இதையும் படிங்க - தொடரும் போர்... உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை போலந்துக்கு மாற்ற முடிவு

 ஸ்னைப்பர் (Sniper) வீரரான வாலி, கனடா ராணுவத்தின் ராயல் கனடியன் 22வது ரெஜிமென்ட் படைப்பிரிவை சேர்ந்தவர். ரஷ்யா உடனான போர் ஆரம்பித்த போது, வெளிநாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு படையில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிடலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று ஸ்னைப்பர் வாலி உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நான் உக்ரைன் ராணுவத்திற்கு உதவ விரும்புகிறேன். எனவே அவர்களுடன் இணைந்தேன். ஐரோப்பாவுடன் இருக்க விரும்புவதால் உக்ரைனில் பொதுமக்கள் குண்டுகள் வீசி கொல்லப்படுகிறார்கள்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க - சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

உலகின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவராக ஸ்னைப்பர் வாலி கருதப்படுகிறார். 40 வயதாகும் அவர், சராசரியாக 5-6 எதிரணி வீரர்களை நாள் ஒன்றுக்கு சுட்டுக் கொல்லும் திறமை கொண்டவர். அதிகபட்சமாக ஒரே நாளில் 40க்கும் அதிகமானோரை முன்பு சுட்டுக் கொன்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் பணியாற்றியபோது, ஸ்னைப்பர் வாலி தொடர்பான தகவல்கள் வைரலாகின. அவருக்கு மனைவியும் ஒரு வயதில் குழந்தையும் உள்ளனர். உக்ரைன் ராணுவத்தில் ஸ்னைப்பர் வாலி இணைந்திருப்பது உக்ரைன் வீரர்களுக்கு மனதளவில் வலிமையைத் தந்துள்ளது.

பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், இன்று 19-வது நாளை எட்டியுள்ளது. தற்போது வரை 12 ஆயிரம் ரஷ்ய வீரர்களை உக்ரைன் ராணுவம் கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ரஷ்ய ராணுவம் இன்னும் உறுதி செய்யவில்லை.

Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine