இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு, 2 பேர் உயிரிழப்பு... என்ன நடக்கிறது?

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக பொதுமக்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர்

news18
Updated: April 21, 2019, 2:45 PM IST
இலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு, 2 பேர் உயிரிழப்பு... என்ன நடக்கிறது?
இலங்கை
news18
Updated: April 21, 2019, 2:45 PM IST
இலங்கையில் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே மேலும் ஒரு குண்டு வெடித்தது.

இலங்கையில் ஏற்கனவே காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்த நிலையில் மேலும் ஒரு இடத்தில் குண்டுவெடித்துள்ளது. இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக பொதுமக்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர்.

Loading...

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...