பாகிஸ்தானில் பெட்ரோலை விட விலை கூடிய பால்...!

பாக்கிஸ்தானில் பெட்ரோலின் விலையை விட பாலின் விலைதான் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை113 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

news18
Updated: September 11, 2019, 3:00 PM IST
பாகிஸ்தானில் பெட்ரோலை விட விலை கூடிய பால்...!
பாக்கிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை 140 ரூபாயா..!
news18
Updated: September 11, 2019, 3:00 PM IST
பாக்கிஸ்தானில் பல்வேறு இடங்களில் மொஹரம் பண்டிகை காரணமாக பால் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் அங்கு பெட்ரோலின் விலையை விட பாலின் விலைதான் அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 113 ரூபாய் ஆக இருக்கிறது. டீசல் லிட்டருக்கு 91 ரூபாயாகும்.

பால் தட்டுப்பாடு காரணமாக கராச்சியின் நகரப் பகுதிகளில் பால் விலை 120 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது என கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தட்டுப்பாட்டிற்குக் காரணம், பாகிஸ்தானில் மொஹரம் பண்டிகையின் போது பங்கேற்கும் மக்களுக்கு பால், ஜூஸ் , தண்ணீர் ஆகியவைக் கொடுப்பது வழக்கம். அதற்காகவே இந்த பால் விலை எகிறியுள்ளது.

இருப்பினும் பால் தேவை அதிகமாக இருப்பதால் மக்கள் பாலை அதிக விலைக் கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மொஹரத்தின் போது பால் முக்கிய பொருளாகும். விலை ஏற்றத்திற்காக அதை மாற்றி அமைக்க முடியாது என்பதற்காகவே வேறு வழியில்லாமல் வாங்கி வருகிறோம் என அங்கு வசிக்கும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading...

பார்க்க :

பொருளாதார மந்தநிலையால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பொருட்களின் விலையை குறைப்பது, வட்டியில்லா கடன் கொடுப்பது என்று பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...