முகப்பு /செய்தி /உலகம் / இலங்கையில் நீக்கப்பட்ட அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

இலங்கையில் நீக்கப்பட்ட அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

கோப்புப்படம்

கோப்புப்படம்

இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பொறுப்பேற்கவில்லை.

  • Last Updated :

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே அரசில் அமைச்சராக இருந்த அர்ஜுனா ரணத்துங்காவின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசை கலைத்து உத்தரவிட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். நாளை ராஜபக்சே அமைச்சரவை பதவியேற்க உள்ளது. தான் நீக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று ரணில் கூறியுள்ளார். இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

ரணில் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த அர்ஜுனா ரணத்துங்கா, கொழும்பு நகரில் உள்ள பெட்ரோலியத்துறை அமைச்சக தலைமை அலுவலகத்துக்கு இன்று வருகை தந்த அவர் சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முயற்சித்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த சிலரை பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்..

ரணில் விக்ரமசிங்கேவும்… பிரதமர் பதவியும்!

”யூதர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்”: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி!

Also See..

First published:

Tags: Gun fire, Security guards, Srilanka