அமெரிக்காவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களில் 19 சதவிகிதம் பேர் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ஐ பின் தொடர்பவர்களாக உள்ளனர் என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ஐ ட்விட்டரில் 60 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ப்யூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், ட்விட்டர் மூலமாக தான் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பெரும் ஆதரவையே ட்ரம்ப் பெற்று வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய ஆய்வு ஜூலை 2019 உடன் நிறைவடைந்துள்ளது. ப்யூ ஆய்வு மையம் 2,388 அமெரிக்க ட்விட்டர் பயனாளர்களிடன் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. இந்தப் பயனாளர்களில் ட்விட்டர் கணக்கு, பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து ஆராய்ந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ட்ரம்ப்-ஐ ட்விட்டரில் பின் தொடர்வோர்களில் சுமார் 54 சதவிகிதம் பேர் அவரது செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவே உள்ளனர் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. ட்ரம்ப் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்தபோதும் 22 சதவிகிதம் பேரே அவருடன் ட்விட்டரில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், முன்னாள் அதிபர் ஒபாமா உடன் 26 சதவிகித மக்கள் ட்விட்டரில் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர்.
மேலும் பார்க்க: அமெரிக்கப் பொருட்களுக்கு வரி: இந்தியாவுக்கு ட்ரம்ப் கண்டனம் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.