அமெரிக்க தலைநகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

அமெரிக்க தலைநகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: September 20, 2019, 12:38 PM IST
  • Share this:
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் தனிநபர் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிப்பதால், அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கின்றன. துப்பாக்கிச்சூடு இல்லாத வாரங்களே இல்லை என்ற நிலை அந்த நாட்டில் நீடிக்கிறது.

தீவிரவாத தாக்குதல்களை விட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்பவர்களே அங்கு அதிகம். இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகைக்கு 3 கி.மீ தொலைவில் உள்ளூர் நேரப்படி இன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.


இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் காயம் அடைந்ததாக போலீசார் கூறுகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்