திருமண நிகழ்வு என்பது அனைவரின் வாழ்விலும் நீங்காத தருணமாக நினைவுகளில் நிற்பவை. வாழ்வின் மறக்க முடியாத அனுபவத்தை சுமந்து நிற்பவை. இந்த நினைவுகளும் அனுபவமும் சுகமானதாக இருப்பதே மணமக்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், பிரிட்டன் நாட்டில் திருமண தினத்தன்று மணமகன் செய்த செயலால் மணமகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த தகவலை திருமண விழாக்களை ஏற்பாடு செய்து நடத்தி தரும் ஜார்ஜ் மிட்சல் என்பவர் பாட்கேட்ஸ் நிகழ்வு ஒன்றில் பகிர்ந்துள்ளார். இவர் திருமண நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து தருபவர். இவர் ஜென்னி என்ற மேக் அப் ஆர்டிஸ்டை பணி அமர்த்தியுள்ளார். பிரிட்டனில் இவர் திட்டமிட்டு நடத்தி கொடுத்த திருமணம் ஒன்றில் தான் இந்த வினோத நிகழ்வு நடைபெற்றதாக நிகழ்ச்சியின் ஹோஸ்டிடம் ஜார்ஜ் தெரிவித்தார்.
ஜார்ஜ் அந்த அனுபவம் குறித்து கூறியதாவது, " திருமண நாள் அன்று மேக் அப் ஆர்டிஸ்ட் ஜென்னி மணமகனுக்கு மேக் அப் செய்தார். பின்னர் மணமகன் இருக்கும் இடத்திற்கு சென்றபோது எதிர்பாராத விதமாக அதிர்ச்சிக்குரிய காட்சி ஒன்றை கண்டிருக்கிறார். திருமண நடைபெற சில நிமிடங்களே உள்ள நிலையில், மணமகன் தனது தாயிடம் தாய்பால் குடித்துக்கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்து போன ஜென்னி இதை மணமகளிடம் பகிரவே அவரும் ஓடிவந்த இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாராம்.
ஜார்ஜ் இதை கூறியதும் அதை கேட்ட நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டும் ‘இது உண்மைதானா?’ என ஆச்சரித்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். சிறு குழந்தையாக இருக்கும் போது ஆரம்பித்த பழக்கத்தை அவர் கடைசி வரை நிறுத்தவில்லை போல என்று ஜார்ஜ் தெரிவித்தார். இதில் கூடுதல் சுவாரஸ்சியம் என்னவென்றால், இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், எந்தவித சர்ச்சையையும் எழுப்பாமல் மணமகனை திட்டமிட்டபடியே திருமணம் செய்து கொண்டார் என ஜார்ஜ் கூறினார். அவர்கள் யார் என்ற அடையாளத்தை ஜார்ஜ் வெளியிடவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breastfeeding, Marriage, Viral