• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஜப்பானின் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று..

ஜப்பானின் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று..

நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று

நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று

ஜப்பானின் இரண்டாவது நகரமான நாகசாகி மீது அமெரிக்கா "ஃபேட் மேன்" என்று பெயரிடப்பட்ட பாக்ஸ்கார் 4.5 டன் புளுடோனியம் வெடிகுண்டை வீசிய தினம் இன்று.

  • Share this:
மனித நாகரீகத்தின் போர் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று, 2ம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல் தான். அந்த கட்டத்தில் உலகம் போர்களுக்குப் பழகியபோது, ​​ஜப்பானில் நடந்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராதது ஆகும். மேலும் அந்த தாக்குதல் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு நடந்த இரண்டாம் உலகப் போரின்போது, ​​அமெரிக்க குண்டுவீச்சு விமானமான B-29 -ஐ பயன்படுத்தி அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் " லிட்டில் பாய்" என்று பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது.

உலக போரின் போது முதன் முதலில் அணுகுண்டு தாக்குதலால் சீரழிந்த நகரமும் இதுதான். குண்டு வீசப்பட்ட ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு மாபெரும் நெருப்புக் கோளம் ஒன்று உருவானது. இது 900 அடி தூரத்திற்கு பரவியது.குண்டு வெடிப்பினால் உண்டான அதிர்ச்சியினால் பத்து மைல் தொலைவில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் இந்த அதிர்வு 37 மைல் தொலைவுக்கு உணரப்பட்டது. ஹிரோஷிமாவின் மூன்றில் இரண்டு பங்கு கட்டிடங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து 4.4 மைல் தொலைவில் உள்ள எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த அதிர்வு பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவை முற்றிலுமாக அழித்து விட்டது. குண்டுவெடிப்பில் மொத்த மக்கள் தொகை 3.5 லட்சம் பேரில் 140,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

காயங்கள் மற்றும் கதிர்வீச்சு காரணமாக இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. அணு வெடிப்பால் 90% நகரமும் அழித்த போதிலும், அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. 3 நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றொரு அணுகுண்டு தாக்குதல் மூலம் ஜப்பானைத் தாக்கியது. இந்த முறை தென்மேற்கு நகரமான நாகசாகி மீது அதன் தாக்குதலை நடத்தியது. ஆகஸ்ட் 9ம் தேதி அன்று காலை 11:02 மணிக்கு, அமெரிக்க குண்டுவீச்சு விமானமான B-29 மூலம் "ஃபேட் மேன்" என்று பெயரிடப்பட்ட பாக்ஸ்கார் 4.5 டன் புளுடோனியம் வெடிகுண்டை வீசியது. நகரத்தை சுற்று மலைகள் சூழ்ந்திருந்தால் பெரிய பேரழிவை தவிர்க்க முடிந்தது. இருப்பினும் குண்டுவீச்சின் காரணமாக 60,000 முதல் 80,000 உயிர்கள் மாய்ந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான அழிவு ஜப்பானை அமெரிக்காவிடம் நிபந்தனையின்றி சரணடையச் செய்தது. ஆகஸ்ட் 15, 1945 அன்று இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தனது ஆயுதங்களைக் கீழே போட்டது. இதையடுத்து ஆசியாவில் அதன் ஆக்கிரமிப்பை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்தது. நாகசாகி நகரம் ஜப்பானியர்களுக்கான கப்பல் கட்டும் மையமாக இருந்தது. ஹிரோஷிமா பேரழிவிற்கு பிறகு 1945 ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நாகசாகி மீது குண்டுவீச்சு நடத்த அமெரிக்கப் படைகள் திட்டமிட்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இருப்பினும், அன்றைய மோசமான வானிலை காரணமாக குண்டுவீச்சு 3 நாட்களுக்கு முன்னதாகவே நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பால் ஏற்பட்ட அழிவு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களை தாக்கத் தொடங்கியது. குண்டுவீச்சின் பின்னால் இருக்கும் கதிர்வீச்சுகள் மக்களுக்கு பல நோய்களையும் குறைபாடுகளையும் ஏற்படுத்தின. புதிதாகப் பிறந்த குழந்தைகள் கூட அழிவின் பாதிப்பை அனுபவித்தனர் மற்றும் குறைபாடுகளுடன் பிறந்தனர். இருவேறு இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து இத்தோடு எழுபத்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. குண்டுவீச்சு அழிவால் எஞ்சியிருக்கும் வடுக்கள் ஜப்பானிய மக்களின் மனதில் இன்னும் அணையாத தீயாகவே இருக்கின்றன. குண்டுவீச்சில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அப்பகுதியில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துவர்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: