ஓமைக்ரான் மட்டுமே கொரோனாவின் கடைசி வேரியண்ட் கிடையாது, எதிர்கால பிறழ்வுகள் உயிர்வாழ்வதில் திறமையானதாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் உள்ள இறைச்சி மார்க்கெட் ஒன்றில் இருந்து முதல் முறையாக கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலக நாடுகளுக்கு மெல்ல பரவிய கொரோனா வைரஸ் விரைவிலேயே உலக நாடுகளை தன் பிடியில் கொண்டு வந்து பெருந்தொற்று நோயாக மாறியது. கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய போதிலும், புதிய வகை கொரோனா மாறுபாடுகள் முந்தைய கொரோனா வைரஸை காட்டிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஆபத்தான் டெல்டா வகை மாறுபாடு உலக நாடுகள் பலவற்றிலும் உயிரிழப்பை பெருமளவில் ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நவம்பரில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் புதிய வகை பிறழ்வு, முந்தைய கோவிட் வேரியண்ட்களைக் காட்டிலும் மிக ஆபத்தான வேகத்தில் பரவக்கூடியது என நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டது. தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் கட்டுக்கடங்காத வகையில் கொரோனா பரவுவதற்கு காரணம் ஓமைக்ரானாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
Also read: கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்
தொற்று நோய் பரவல் அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா பிரிவு இயக்குனர் Hans Kluge தெரிவித்திருந்த நிலையில் ஓமைக்ரான் மட்டுமே கொரோனாவின் கடைசி வேரியண்டாக இருக்காது என who-வின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் Maria van Kerkhove தெரிவித்திருக்கிறார்.
Maria van Kerkhove கூறியிருப்பதாவது, “கொரோனா வைரஸ் இன்னும் உருவாகி, மாறிக்கொண்டே இருக்கிறது, அதற்கேற்ப நாம் மாறி, சரிசெய்ய வேண்டும். உலகெங்கிலும் தடுப்பூசி கவரேஜை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முயற்சி செய்து மாற்றவும் வேண்டும். இது சமீபத்திய அலையுடன் முடிவடையாது மற்றும் ஓமிக்ரான் துரதிர்ஷ்டவசமாக நாம் பேசும் கடைசி மாறுபாடாக இருக்காது.
Also read: ரூ.500-க்காக குடுமிப்பிடி சண்டையிட்ட பெண் சுகாதார ஊழியர்கள்!! - வீடியோ வைரல்
தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் 10 பில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மூன்று பில்லியன் மக்கள் இன்னும் முதல் டோஸ் கூட பெறவில்லை.
டெல்டாவை விட ஓமைக்ரான் பாதிப்பு குறைவானதாக இருக்கலாம். ஆனால் இது பலரையும் மருத்துவமனைகளில் சேர்க்க காரணமாக இருக்கிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சிக்கல் தான்.
Also read: அவமானப்படுத்திய சேல்ஸ்மேன்.. 1 மணி நேரத்தில் கார் ஷோருமை மிரள வைத்த விவசாயி!!
கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு இன்னும் எத்தனை மாதங்கள், ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என தெரியாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.