Home /News /international /

வேகமாக பரவும்..தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும்: ஒமைக்ரான் குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்

வேகமாக பரவும்..தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும்: ஒமைக்ரான் குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ்

டெல்டா வகை ( Delta variant) வைரஸை விட ஒமைக்ரான் (Omicron) வைரஸ் வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் எனினும் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.  

மேலும் படிக்கவும் ...
    ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும் தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

    இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட டெல்டா வகை வைரஸ், கொரோனா தொற்று பாதிப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வகை ஆகும். இந்த வகை தொற்று அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தற்போது இதன் தாக்கம் குறைந்துள்ளது.

    இந்நிலையில், ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தொற்று சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒமைக்ரான் தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. டிசம்பர் 9ம் தேதி கணக்குப்படி 63 நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது.  இந்த தொற்றின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சில விளக்கங்களை தெரிவித்துள்ளது.

    அதன்படி, டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் எனினும் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.  தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், சமூகப் பரவல் நிகழும்பட்சத்தில் டெல்டா திரிபை ஒமைக்ரான் திரிபு விஞ்சும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி: 100க்கும் மேற்பட்டோர் பலி


    . தடுப்பூசி உற்பத்தியாளர்களான Pfizer/BioNTech கடந்த வாரம் தங்கள் தடுப்பூசி மூன்று டோஸ்கள் Omicron க்கு எதிராக தற்போது திறன்பட செயல்படுவதாக கூறியுள்ளன. இதேபோல், தடுப்பூசி அதிகம் உள்ள பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தங்கள் மக்களை ஊக்குவிக்கின்றன.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Delta Variants, Omicron

    அடுத்த செய்தி