Home /News /international /

ஓமைக்ரான் உச்சம்- பிரிட்டனில் ஒரே நாளில் 78,000 பேருக்குதொற்று- அமெரிக்காவிலும் நாளுக்குநாள் அதிகரிப்பு

ஓமைக்ரான் உச்சம்- பிரிட்டனில் ஒரே நாளில் 78,000 பேருக்குதொற்று- அமெரிக்காவிலும் நாளுக்குநாள் அதிகரிப்பு

பிரிட்டன், அமெரிக்காவில் ஓமைக்ரான் தீவிரம்

பிரிட்டன், அமெரிக்காவில் ஓமைக்ரான் தீவிரம்

பிரட்டனில் ஒமைக்ரான் வைரஸ் உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரி்ட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று வெகு வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    பிரட்டனில் ஒமைக்ரான் வைரஸ் உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரி்ட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று வெகு வேகமாகப் பரவி வருகிறது.

    அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 1 ஆம் தேதி கணக்கின்படி அன்றாட சராசரி தொற்று 86,000 ஆக இருந்தது. அதுவே டிசம்பர் 14 ஆம் தேதியின் படி 1 லட்சத்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    பிரிட்டனில் பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை உக்கிரம் பெற்றுள்ளது. அடுத்த சில நாட்களில் பாதிப்பு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    ஒரேநாளில் 78ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டது அதிகபட்சமாகும். பிரிட்டனில் 6.7 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் இதுவரை 1.10 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று அளித்த பேட்டியில், “ பிரிட்டனில் அதிக சக்தி வாய்ந்த, வேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸால்தான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்துவரும் நாட்களில் பாதிப்பின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும்” என எச்சரித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கையில், “இந்த குளிர்காலத்தில் அதிகமானோர் நோய் வாய்ப்படவும், அதிகமான உயிரிழப்புகள் நேரவும் வாய்ப்புள்ளது. இப்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே. அமெரிக்கா கொரோனா பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தை பதற்றத்துடன் எதிர்கொண்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் டோஸை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுங்கள்” என்று அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

    கடந்த நவம்பர் இறுதியில் ஒமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதனால் மரணங்கள் இல்லை என்றாலும் அதிவேகமாகப் பரவுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் இப்போது 77 நாடுகளில் பரவி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் 77 நாடுகளுக்குப் பரவி இருப்பது அதன் பரவும் தீவிரத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: Omicron Count In India | இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்: புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதி
    இதையும் படிங்க: பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்

     

    பிரிட்டன் சுகாதாரத்துறை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்னி ஹாரிஸ் கூறுகையில் “கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒமைக்ரான் வைரஸ்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

    அடுத்துவரும் நாட்களில் தற்போதுள்ள பாதிப்புகளைவிட இன்னும் மோசமாக அதிகரிக்கும். மற்ற உருமாறிய வைரஸ்களைவிட ஒமைக்ரானில்பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. பிரி்ட்டனில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக லண்டன், மான்செஸ்டர் நகரங்களில் ஒமைக்ரானில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட இரு நாட்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி