ஹோம் /நியூஸ் /உலகம் /

Omicron Virus | டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Omicron Virus | டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

நைஜீரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • 2 minute read
  • Last Updated :

டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் 70 மடங்கு வேகமாக பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும் கொரோனா ஏற்படுத்திய விளைவுகளை விட, ஒமைக்ரான் அதிக விளைவுகளை ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அதாவது கொரோனாவின் டெல்டா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பில், 10-ல் ஒரு பங்கு பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை பிரபல மருத்துவ வல்லுநர் மைக்கேல் ஜான் சி - வாய் தலைமையிலான குழு மேற்கொண்டது.

இந்த ஆய்வின்படி, ஒமைக்ரான் வைரஸ் ஒரு நபரின் உடலில் இருந்து, மற்றொரு நபரின் உடலுக்கு மிக வேகமாக பரவி விடும். ஆனால் தொற்று ஏற்பட்ட நபர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா மற்றும் டெல்டா வேரியன்ட் வைரஸ்கள் நுரையீரலில் பாதிப்பை உருவாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை.

இதையும் படிங்க : தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

இதேபோன்று ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு, அறிகுறிகள் லேசாகவே தென்படும். அவர்களில் பலருக்கு மருத்துவமனை சென்று சிகிச்சை மேற்கொள்ளும் அவசியம் இருக்காது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திய போது, தொற்று ஏற்பட்ட நபருக்கு ஆக்சிஜன் வசதிகள் தேவைப்பட்டன. மேலும் அவசர சிகிச்சைப் பிரிவிலும் தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த அளவிலான பாதிப்பு ஒமைக்ரான் வைரஸால் ஏற்படாது என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தற்போது வரை 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் கொரோனாவை விட மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஒமைக்ரான் ஏற்படுத்தாது என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் இந்த ஒமைக்ரான் வைரஸும் உருமாற தொடங்கினால் அது பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. தினசரி வகுப்புகள் குறித்து 25-ம் தேதி முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பை ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்று தற்போதுவரை மருத்துவ நிபுணர்கள் நம்பி வருகின்றனர். இருப்பினும் மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பேரிழப்புகளை தவிர்க்க முடியும்.

Published by:Musthak
First published:

Tags: Omicron