ஹோம் /நியூஸ் /உலகம் /

Omicron: வேகமாக பரவும் ஒமைக்ரான்... வெளி நாட்டு பயணிகள் வருவதற்கு இஸ்ரேல் அதிரடி தடை

Omicron: வேகமாக பரவும் ஒமைக்ரான்... வெளி நாட்டு பயணிகள் வருவதற்கு இஸ்ரேல் அதிரடி தடை

இந்தியாவிலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வந்த 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஆரம்பித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு உலக நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணி நாடாக இருக்கும் இஸ்ரேல், எந்தவொரு வெளிநாட்டுப் பயணியும் இஸ்ரேலுக்குள் வருவதற்கு அதிரடி தடையை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் இஸ்ரேலியர்கள், கட்டாயம் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்று இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரைவழியாக அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு கண்காணிப்புகளை இஸ்ரேல் அரசு அதிகப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்தை 40 சதவீதம் செயலிழக்க வைக்கும் சக்தி, ஒமைக்ரான் வைரசுக்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் உலக நாடுகள், பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றின் மூலம், ஒமைக்ரான் பரவலை குறைக்க முடியும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ, செஷல்ஸ் ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவிலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வந்த 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அலட்சியம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை ஒமைக்ரான் உணர்த்தியுள்ளது.

ஒமைக்ரான் பரவல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வேரியன்ட்களை விட ஒமைக்ரான் வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்ற வல்லுனர்களின் எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Corona, CoronaVirus, Israel, Omicron