முகப்பு /செய்தி /உலகம் / Omicron Virus | மற்ற கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது: உலக சுகாதார அமைப்பு

Omicron Virus | மற்ற கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது: உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் மிக மோசமான விளைவுகளை உருவாக்காவிட்டாலும், நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் மிக மோசமான விளைவுகளை உருவாக்காவிட்டாலும், நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் மிக மோசமான விளைவுகளை உருவாக்காவிட்டாலும், நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகையே அச்சுறுத்தும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனை குறைத்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து படிப்படியாக விலகி வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனாவின் மற்றொரு பிரிவான ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது. ஒமைக்ரான் தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில்,  உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 63 நாடுகளில் பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரானும், பிரிட்டனில் டெல்டா வகை கொரோனாவும் அதிகம் பரவி உள்ளன.

முதல் கட்ட ஆய்வு தகவலின்படி கொரோனா வைரஸ் தொற்றுவதையும் பரவுவதையும் தடுக்கும் தடுப்பூசியின் செயல் திறனை ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் குறைத்து விடும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்தால் விரைவிலேயே டெல்டா வகை கொரோனா பரவலை விஞ்சிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்றால் லேசான உடல்நலக்குறைவோ அல்லது அறிகுறி இல்லாத பாதிப்பும் ஏற்படுவதாக அது கூறியுள்ளது.

ஆனால் போதுமான தரவுகள் இல்லை என்பதால் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பின் வீரியத்தை அறுதியிட்டு கூற முடியாது என்பதையும் உலக சுகாதார அமைப்பு தெளிவுப்படுத்தியுள்ளது.

Also read: 20 நிமிடங்களில் ஒமைக்ரான் உள்ளதா என கண்டறியலாம் - புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு

First published:

Tags: Omicron, WHO