ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒமைக்ரான் பாதிப்புக்கு பிரிட்டனில் முதல் பலி... தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

ஒமைக்ரான் பாதிப்புக்கு பிரிட்டனில் முதல் பலி... தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பால் மிகவும் இழப்பை சந்தித்த நாடுகளில் பிரிட்டன் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் பிரிட்டனில் காட்டுத் தீயாக பரவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். ஒமைக்ரான் பாதிப்பால் பிரிட்டனில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பூஸ்டர் டோசை செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பால் மிகவும் இழப்பை சந்தித்த நாடுகளில் பிரிட்டன் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் பிரிட்டனில் காட்டுத் தீயாக பரவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா பரவலின்போது அரசு சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப் படுத்துவதில், போரிஸ் ஜான்சன் அரசு கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் அறிகுறிகளுடன் பிரிட்டன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Also Read : அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி: 100க்கும் மேற்பட்டோர் பலி

மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருப்பவர்களில் 40 சதவீதம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். தேவைப்பட்டால் அவசர நிலை நாட்டில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே கொரோனா 2 டோஸ்களை செலுத்தியவர்கள், 3வதாக பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்வதற்கு பிரிட்டன் அரசு முடிவு செய்திருக்கிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து, அங்கு கொரோனா தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்திருப்பவர்கள் எண்ணிக்கை மளமளவென உயர்ந்திருக்கிறது.

Also Read : வேகமாக பரவும்..தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும்: ஒமைக்ரான் குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்

மணிக்கணக்கில் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதாக லண்டனை சேர்ந்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பாதிப்புக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் போதாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 3வது டோஸை போட்டுக் கொள்வதற்கு பிரிட்டனில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், அதற்கு அனுமதி கிடையாது என்று அரசு கூறியுள்ளது. அதையும் மீறி சட்டவிரோதமாக கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Omicron