Home /News /international /

23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது

23 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு : அமெரிக்காவிலும் நுழைந்தது

ஒமிக்ரான்

ஒமிக்ரான்

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து கலிபோர்னியா திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    உலகம் முழுவதும் 23 நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

    ஒமைக்ரான் தொற்றின் ஆபத்து குறித்து உலகளவில் கவனம் பெற தொடங்கியிருப்பதாக கூறியுள்ள டெட்ரோஸ் அதானோம், ஐந்து கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தற்போது பதிவாகியுள்ளது எனவும், இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

    இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில்  பரவியிருப்பதாக கூறியுள்ள அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி, “இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமான உருமாற்றங்களை கொண்டுள்ளது. இருப்பினும் இது மிகவும் பரவக்கூடியதா என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது” என்றார்.

    இந்தநிலையில், ஒமைக்ரான் வைரஸ், அமெரிக்காவிலும் நுழைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து கலிபோர்னியா திரும்பிய ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு, தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

    Must Read : வேதா இல்லம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக மனு!

    இந்நிலையில், அமெரிக்காவில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் ஜாப்ஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க மக்களை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CoronaVirus, Omicron

    அடுத்த செய்தி