Home /News /international /

24 நாடுகளுக்கு ஒமைக்ரான் திரிபு பரவல் - உலக சுகாதார மையம் அறிவிப்பு

24 நாடுகளுக்கு ஒமைக்ரான் திரிபு பரவல் - உலக சுகாதார மையம் அறிவிப்பு

கொரோனாவின் ஒமைக்ரான் திரிபு 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

கொரோனாவின் ஒமைக்ரான் திரிபு 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

கொரோனாவின் ஒமைக்ரான் திரிபு 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

    அதிக பரவல் தன்மையையும், 30-க்கும் மேற்பட்ட திரிபுகளையும் கொண்ட ஒமைக்ரான், தற்போது வரை 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்ட பின்னர் தென் ஆப்ரிக்காவில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு இருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தென் ஆப்ரிக்காவிற்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இதனால் மீண்டும் பொருளாதார சுணக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    விமான சேவைகளை முடக்குவதால் மட்டுமே, தொற்று பரவலை தடுத்து நிறுத்தி விட முடியாது என குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அனைவருக்கும் தடுப்பூசி என்பதே தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.

    வைரஸ் கிருமிகள் எல்லையற்றவை. எந்தவொரு நாட்டையும் தனிமைப்படுத்தும் பயணக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை மற்றும் தண்டனைக்குரியவை. அதுமட்டுமல்லாமல் அவை பயனற்றவை கூட என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே தென் ஆப்ரிக்காவிலிருந்து மும்பை விமான நிலையம் வந்த பயணிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா, லெசோதோ, ஜிம்பாப்வே மற்றும் ஈஸ்வதினி நாடுகளை அதிக ஆபத்து நிறைந்த பட்டியலில் வகைப்படுத்தியுள்ள மகாராஷ்டிரா மாநில அரசு அந்நாடுகளில் இருந்து வருவோர் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் 7 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை விமான நிலையத்தில் தென் ஆப்ரிக்கா, சீனா, இஸ்ரேல், சிங்கப்பூா் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டாவது நாளாக பரிசோதனை நடத்தப்பட்டது.

    மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.

    ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோர் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். பொது இடங்களுக்கு வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்றும் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Also read: இந்தியாவில் கிளை பரப்பும் ஓமைக்ரான் வைரஸ் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி