ஒமைக்ரான் பரவல் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழலில் 8 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட விமானப்போக்குவரத்து தடையை அமெரிக்க அரசு நீக்கியுள்ளது. இதற்கு அந்நாட்டின் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு சென்று பின்னர் ஐரோப்பா, ஆசியா என உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. முன்னெச்சரிக்கையாக உலக நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருநது வரும் விமானங்களுக்கு தடை விதித்தன.
அமெரிக்காவிலும் இதேபோன்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், தென்னாப்பிரிக்கா, போத்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து தடையை அதிபர் ஜோ பைடன் விலக்கிக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் மட்டும் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பின்போதும் பலமுறை விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து துறைக்கு அடிமேல் அடி விழத் தொடங்கியுள்ளது.
Also Read : குறைப்பிரசவமான பெண்ணுக்கு கோடிக்கணக்கில் வந்த மருத்துவமனை பில் - அமெரிக்காவில் அதிர்ச்சி!
கொரோனா அச்சுறுத்தல் அகன்று விட்டதாக சர்வதேச நாடுகள் நிம்மதி அடைந்து கொண்டிருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாத கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் விறுவிறுவென மற்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது.
Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை
இதற்கு விமானப் போக்குவரத்தும், விமான நிலையங்களில் சரிவர சோதனைகள் நடத்தப்படாததுமே முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்ளுக்கு மற்ற நாடுகள் தடை விதித்து வந்தன.
Also Read : 3000 ஆண்டு பழமையான மம்மி உடலுக்கு உருவம்! தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அராய்ச்சியாளர்கள் முயற்சி
கடந்த ஒரு வாரகாலமாக ஒமைக்ரான் பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த வெள்ளியன்று முதல் உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.