ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று விரைவாக பரவும் இயல்பு உடையது என்று கூறப்படும் அதேவேளையில், இதனால் ஏற்படும் பாதிப்பு குறைவானது என்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
டெல்டா வகை வைரஸ் 15 முறை உருமாற்றம் அடைந்ததால் ஏற்பட்டதாகும். ஆனால், ஒமிக்ரான் வகை வைரஸ் அதை விட இரு மடங்குக்கும், அதாவது 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களை பற்றுவதற்கான ஒமிக்ரான் வகை கொரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன. இதனால் இந்த வைரஸ் எளிதாக ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்த வைரஸ் தொடர்பாக சில ஆறுதல் அளிக்கும் தகவல்களும் வெளியாகியுள்ளன. தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராக உள்ள ஏஞ்சலிக் கோட்ஸி (angelique coetzee). 'ஓமிக்ரான்' தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சோர்வு, தலை மற்றும் உடல் வலிகள்ஆகியவை ஏற்படுகின்றன. எப்போதாவது தொண்டை புண் மற்றும் இருமல் ஏற்படுவதாக கூறியுள்ளார்.
இதை படிக்க: உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
டெல்டா வகை கொரோனாவால் உடலில் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறையும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், ஒமிக்ரான் வகை காரணமாக அத்தகைய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறதும். மேலும், ஒமிக்ரான் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்பு பாதிப்பும் குறைவு என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதேபோல், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றும் ஏஞ்சலிக் கோட்ஸி கூறியுள்ளார்.
ஏனைய வகை கொரோனா தொற்றுடன் ஒப்பிடும்போது இதனால் ஏற்படும் அறிகுறிகள் என்பது குறைவானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: எல்லைப் பாதுகாப்பு படைகளுக்காக குளிர்-தடுப்பு ஆடைகளை அறிமுகப்படுத்திய சீனா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona Symptoms, Covid-19