கொரோனா பரவல் இப்போதைக்கு முடிவுக்கு வராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பெருந்தொற்று, புதிய வேரியண்ட்களாக உருவெடுத்து, ஒரு முடிவே இல்லாமல் பல அலைகளாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டது மட்டுமே மக்களுக்கான கேடயமாக இருந்து காத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், கொரோனா பரவல் தற்போது முடிவுக்கு வராது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
Also read: ரஷ்யாவுக்கு ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை.. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல்
கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாடு உலகெங்கிலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் இதை ஒரு லேசான நோய் என்பது வர்ணிப்பது தவறான வழிநடத்தலாகும் மற்றும் குறைவான பாதிப்புகள் கூட சுகாதார வசதிகளை மூழ்கடிக்கின்றன.
பல நாடுகளுக்கு, அடுத்த சில வாரங்கள் சுகாதார அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நீங்கள் சுகாதார கட்டமைப்புக்கு அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.
Also read: சீன ராணுவத்தால் அருணாச்சல பிரதேச சிறுவன் கடத்தல்
ஓமைக்ரான் உட்பட, கோவிட்-19 வைரஸின் ஒவ்வொரு மாறுபாடும் ஆபத்தானது. தீவிர பாதிப்பு மற்றும் இறப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் வைரஸ் பிறழ்வுகள் மற்றும் அதை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் வைத்திருக்கும் கருவிகளின் செயல்திறனை பாதிக்கலாம்.
ஓமைக்ரான் தொடர்ந்து உலக நாடுகளை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது. குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், ஏனெனில் தடுப்பூசி போடப்படாதவர்கள் கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தில் பல மடங்கு அதிகம்” இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
Also read: மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்
ஏற்கனவே கொரோனா பரவல் இரண்டு ஆண்டுகளாக மக்களை பாடாய்ப் படுத்தி வரும் நிலையில், தற்போதைக்கு கொரோனா பரவல் முடிவுக்கு வராது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியிருப்பது மக்களிடையே சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.