இன்றைய சமூக சூழலில் 100 வருடங்கள் வாழ்வது எல்லாம் கனவில் கூட நடக்காது என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருந்து வருகிறது. நாம் தினசரி செய்யும் வேலை, உண்ணும் உணவு, தூக்கமின்மை, சுற்றுசூழல் மாசு என்று ஆயுளை குறைக்கும் வேலைகளை தான் அதிகம் செய்கிறோம். அப்படி இருக்கும் போது தனது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய இங்கிலாந்து பாட்டி ஒரு வித்தியாசமான டிப்ஸை தருகிறார்.
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கும் பல ரகசியங்கள் உள்ளன. நன்றாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவது நீண்ட ஆயுளுக்கு ஒரு யுத்தி என்று சிலர் கூறுகிறார்கள். உடற்பயிற்சி குறித்து கூட சொல்லி கேட்டிருப்போம். ஆனால் ஆலிவ் வெஸ்டர்மேன், என்ற 100 வயதை எட்டிய இங்கிலாந்து பாட்டி, தனது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் கூறுகிறார்.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாக பணம்.. ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்.. அள்ளிச்சென்ற பணியாளர்கள்!
தெரியாத மனிதர்களைத் தவிர்ப்பதன் மூலமோ அல்லது அவர்களுடன் பேசாமல் இருந்ததன் மூலமோ தான் இவ்வளவு காலம் வாழ்ந்ததாக அவர் சொல்கிறார் . ஆலிவ் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அவரது மறைந்த கணவர் சாமுடன் கழித்துள்ளார். பயண எழுத்தாளரான சாமுடன் பயணங்களில் தான் அதிக காலத்தை செலவளித்துள்ளார்.
அதற்கு முன்னர் ஆலிவ் ஒரு நர்சரி பள்ளி செவிலியராக பணிபுரிந்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் நர்சரி குழந்தைகளுடன் மிக கனிவாக நடந்து வந்துள்ளார். குழந்தைகளுடன் சேர்ந்து குதூகலமாக விளையாடும் பழக்கம் நமது மனதை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள உதவும். அப்போது நீண்ட நாட்கள் வாழலாம் என்கிறார். அவர் தனது அன்பான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு சமீபத்தில் தனது 100 வது பிறந்தநாளை உட்சகமாக கொண்டாடினார். அப்போது தான் செஸ்டரில் உள்ள டீவாட்டர் கிரேஞ்ச் குடியிருப்பு இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது "விசித்திரமான மனிதர்களுடன் பேசுவதைத் தவிர்க்கவும், அப்போது தான் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ முடியும் " என்று ஆலிவ் தனது நீண்ட ஆயுளுக்கான ஞானத்தைப் பகிர்ந்து கொண்டார்.
"நான் சொல்லக்கூடிய சிறந்த அறிவுரை, மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க வேண்டும், மேலும் உங்களிடம் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பல ஆண்டுகளாக நான் குழந்தைகளுடன் வேலை செய்வதில் நிறைய நேரம் செலவிட்டேன். உங்களை இளமையாக வைத்திருக்க இது நிச்சயமாக உதவிவும்! எனக்கு இப்போது 100 வயதாகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending News