Home /News /international /

Tokyo Olympics| டோக்கியோவில் இன்று 3,177 பேர் பாதிப்பு: ஒலிம்பிக்ஸை மிரட்டும் கொரோனா

Tokyo Olympics| டோக்கியோவில் இன்று 3,177 பேர் பாதிப்பு: ஒலிம்பிக்ஸை மிரட்டும் கொரோனா

ஒலிம்பிக் தொடக்கவிழா

ஒலிம்பிக் தொடக்கவிழா

டோக்கியோவில் மட்டும் ஒரேநாளில் 3,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் போட்டி அமைப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

    டோக்கியோவில் பல எதிர்ப்புகளுக்கும் அதிருப்திகளுக்கும் இடையே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரேநாளில் டோக்கியோவில் மட்டும் 3,177 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதில் போட்டி அமைப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

    அங்கு பெருந்தொற்று தொடங்கிய பிறகு ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை 3,000-த்தை தொட்டிருப்பது இப்போதுதான். புதனன்று 3,000 கொரோனா பாதிப்புகள் புதிதாக ஏற்பட்டதால் டோக்கியோவில் மருத்துவமனைகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது.

    ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இதில் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகளும் அடங்குவர்.

    Also Read: 2வது டி20: ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இல்லை- விளையாடப்போவது யார் யார்?
     இந்த ஒலிம்பிக் போட்டிகளே அங்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடங்காத கொரோனா 2வது நாளாக அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாசிட்டிவ் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பீதிதான் அதிகரித்து வருகிறது.


    Also Read: டோக்கியோ ஒலிம்பிக் : உலகின் நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை நொறுக்கிய பிரவின் ஜாதவ்
     இத்தனைக்கும் ஜப்பான் அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. செவ்வாயன்று 2,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று நிபுணர்கள் எச்சரிக்கவே செய்கின்றனர். இன்று மட்டும் டோக்கியோ ஒலிம்பிக் வட்டாரத்தில் 16 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் இதனால் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவர் ஜுன் அஜுமி கூறும்போது, கொரோனா தொற்றுப் பரவல் குறித்து அரசு ஓவர் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. இது நிச்சயம் சூழ்நிலையை மோசமடையச் செய்யும் என்று எச்சரித்தார். ஒலிம்பிக் முடிந்தவுடன் ஜப்பானை கொரோனா எனும் புதிய தேசிய நெருக்கடி தாக்கும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் இருக்கும் போது ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதால் மக்களுக்கு கொரோனா அச்சமில்லாமல் போய் வெளியில் சரமாரியாக நடமாட அரசு வழி வகுத்துள்ளது என்று பலரும் அங்கு அரசை ஒலிம்பிக் போட்டிகளுக்காக விமர்சனம் செய்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona positive, Tokyo Olympics

    அடுத்த செய்தி