13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் காலடி சுவடுகள் கண்டெடுப்பு

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள வைட் சாண்ட்ஸ் தேசிய பூங்காவில், ப்ளேயா என அழைக்கப்படும் உலர்ந்த ஏரி படுக்கையிலிருந்து கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் காலடி சுவடுகள் கண்டெடுப்பு
காலடித் தடங்கள்
  • Share this:
சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனின் மிக நீண்ட புதைபடிவ காலடி தடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அநேகமாக அவர் ஒரு தாயாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.  அந்த பயணத்தை அவசரமாக எடுத்துக் கொண்டார் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள வைட் சாண்ட்ஸ் தேசிய பூங்காவில், ப்ளேயா என அழைக்கப்படும் உலர்ந்த ஏரி படுக்கையிலிருந்து கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நூறாயிரக்கணக்கான கால்தடங்கள் சுமார் 11,550 முதல் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களை குறிப்பதாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் பண்டைய மனிதர் ஒருவரின் காலடித்தடங்களை பார்க்கும்போது, அவர் ஒரு இளம் வயது ஆணாக இருக்கக்கூடும் என்றும் அவர் அவசரமாக சென்று கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அவர்கள் வினாடிக்கு 1.7 மீட்டர் வேகத்துக்கு மேல் நடப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அவர்களின் ஒரு வசதியான நடை வேகம், தட்டையான உலர்ந்த மேற்பரப்பில் வினாடிக்கு 1.2 முதல் 1.5 மீட்டர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த பனி யுகத்தின் முடிவில் இருந்து கிடைத்த இந்த புதைபடிவ தடம் மூலம் உருவாக்கப்பட்ட பாதையானது குறைந்தது 1.5 கி.மீ.க்கு மேல் மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்களின் பாதை நேராக அமைந்திருப்பதை கண்டறிந்தனர்.

இது அந்த நபர்கள் தங்கள் இலக்கை விரைவாக அடைய விரும்பியதாக கூறப்படுகிறது. சுவாரஸ்யமாக, பாதையின் நடுவில் ஒரு குழந்தையின் சில தடம் தெரிந்தது. இது, ஒரு தாய் தனது குழந்தையை இடுப்பில் மாற்றி அமரவைப்பதற்கும் அல்லது ஓய்வெடுப்பதற்கும் கீழே இறக்கி வைத்த நேரமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவர்கள் அவசரமாக தங்களது பயணத்தை மேற்கொண்டிருக்கலாம்.


ஆனால், ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்த மிகச் சிறந்த யூகம் என்னவென்றால் அந்த நாட்களில் இப்பகுதியைக் கடந்து சென்ற மெகா விலங்கினங்களினால் ஏற்படும் ஆபத்து காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மாம்மத், பெரிய ஸ்லோத், பெரிய கூரான பார்கள் கொண்ட காட்டுப் பூனைகள், பயங்கரமான ஓநாய்கள், காட்டெருமை மற்றும் ஒட்டகங்கள் போன்ற பாரிய உயிரினங்கள் இப்பகுதியில் பிரதானமாக இருந்தன. இவை மனிதர்களால் வேட்டையாடப்பட்டன.


அந்த வகையில், ஒரு தனி மனிதர் இடுப்பில் ஒரு குழந்தையுடன் ஏதேனும் விலங்கினத்தால் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கலாம். எனவே வேகமான பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாரஸ்யமாக, அங்கு இரண்டு செட் அடிச்சுவடுகள் காணப்பட்டன. ஆனால் திரும்பும் பயணத்தில், தாயின் கால் சுவடு மட்டுமே தென்பட்டது. ஆகவே, குழந்தையை எங்காவது கைவிடுவதற்கான கடமை அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவர் அவசரமாக திரும்பி வந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading