• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பெட்ரோல்-டீசல் விலை குறையப் போகிறது: உற்பத்தியை அதிகரிக்க 'எண்ணெய்’ நாடுகள் சம்மதம்!

பெட்ரோல்-டீசல் விலை குறையப் போகிறது: உற்பத்தியை அதிகரிக்க 'எண்ணெய்’ நாடுகள் சம்மதம்!

பெட்ரோல் டீசல்

பெட்ரோல் டீசல்

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒப்பெக் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 மில்லியன் பேரல்களாக குறைத்தன. இதன் காரணமாக தேவை அதிகரித்து, விலை உயர்ந்தது. தற்போது, புதிய ஒப்பந்தத்தின்படி  தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்க ஒப்பெக் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன

  • Share this:
    எரிபொருள் உற்பத்தியை  அதிகரிக்க ஒப்பெக் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதால், விரைவில் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளதாக சாமானிய மக்கள் அவதியடைந்துள்ளனர். டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு வாகன கட்டணம் உயர்ந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  இவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க Opec (oil and petroleum exporting countries) நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.  கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, தேவையை சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்க அவை முடிவு செய்துள்ளன.  சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே இருந்த வேறுபாடு களையப்பட்டுள்ளதும் இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: ஸ்டெர்லைட்: ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை நீட்டிக்க எதிர்ப்பு!


    கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒப்பெக் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 மில்லியன் பேரல்களாக குறைத்தன. இதன் காரணமாக தேவை அதிகரித்து, விலை உயர்ந்தது. தற்போது, புதிய ஒப்பந்தத்தின்படி  தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்க ஒப்பெக் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

     மேலும் படிக்க: திமுக ஐ.டி. விங்கில் மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு?


    ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை  உற்பத்தி அதிகரிக்கப்படவுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்படுவதால்  இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை குறையக் கூடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: