முகப்பு /செய்தி /உலகம் / போர் அச்சுறுத்தல்களை மீறி யுனெஸ்கோ அந்தஸ்தைப் பெற்றுள்ள உக்ரேனிய துறைமுகம்!

போர் அச்சுறுத்தல்களை மீறி யுனெஸ்கோ அந்தஸ்தைப் பெற்றுள்ள உக்ரேனிய துறைமுகம்!

ஒடெசா துறைமுக நகரம்

ஒடெசா துறைமுக நகரம்

ஒடெசா துறைமுக நகரம் யுனெஸ்கோவின்  ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

இயற்கை தளங்கள், பாரம்பரிய கட்டிடங்களை அதன் வரலாற்று தனித்தன்மையுடன் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் சில இடங்களை பாரம்பரிய தலமாக அறிவிக்கும். அதை எந்த சேதமும் ஆகாமல் பாதுகாப்பது மனித சமூகத்தின் கடமை என்று விதித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் போர்களை தாண்டி  ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள  ஒடெசா துறைமுக நகரத்தை உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.

உக்ரைனின் பல நகரங்கள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால், அதன் முக்கிய நகரத்தை பாரம்பரிய தலமாக அறிவித்து தலத்தின் மிகச்சிறந்த உலகளாவிய மதிப்பை பாதுகாக்கும் கடமையை அனைத்து மனிதகுலதிற்கும் யுனெஸ்கோ நிறுவனம் அளித்துள்ளது. குறைந்தபட்சம் இந்த நகரத்திலாவது  அமைதி நிலைக்கும் என்று நம்பப்படுகிறது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 21 உறுப்பு நாடுகளில் 6 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இரு நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் விலகிவிட்டது.  ரஷ்யா இந்த தலத்தின் 'சிறந்த உலகளாவிய மதிப்பை' அங்கீகரிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தவும்  வாக்குபதிவை தவிர்க்கவும் பலமுறை முயற்சித்தது. ஆனால் இறுதியில் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி  தெரிவித்துள்ள யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, போர் தொடரும் அதே வேளையில், இந்த நகரத்தை மேலும் அழிவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றார். இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த முடிவைப் பாராட்டினார்.

மேலும் ரஷ்ய குண்டுவெடிப்பிலிருந்து நகரத்தைப் பாதுகாக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உதவிகளை அவர் கேட்டுவந்தேன். தற்போது ஒடெசாவுக்கு யுனெஸ்கோ பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த இடத்தைப் பாதுகாக்க உதவிய நாடுகளுக்கு  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

அறிக்கைகளின்படி, இந்த தளம் ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது . இதன் மூலம் இந்த இடத்தை பாதுகாக்க உக்ரைன் வலுவூட்டப்பட்ட தொழில்நுட்ப மற்றும் நிதி  உதவிகளை சர்வதேச அளவில் பெற முடியும் என்று யுனெஸ்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Russia - Ukraine, Travel, UN