அல்கொய்தா அமைப்பின் தலைவர், அய்மன் அல்-ஜவாஹிரி ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார்.
உலகில் உள்ள முக்கிய தீவிரவாத கும்பலாக இருக்கும் அல்கொய்தாவின் முந்தைய தலைவர் ஒசாமா பின்லேடனை 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டை கோபுர தாக்குதலுக்காக அமெரிக்கா 2011 இல் பாகிஸ்தானில் உள்ளே சென்று தாக்கி கொன்றது. அதன் பின்னர் அல்கொய்தா, தலைவர் இல்லாமல் இருந்த நிலையில் அடுத்த தலைவராக அய்மன் அல்-ஜவாஹிரி மாறினார். அல்கொய்தா தாக்குதலுக்குப் பெருமளவு பாதிக்கப்பட்ட அமெரிக்கா தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் ஷெர்பூர் பகுதியிலிருந்த அய்மன் அல்-ஜவாஹிரியை ஆளில்லா டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றனர்.
More than 20 years after 9/11, one of the masterminds of that terrorist attack and Osama bin Laden’s successor as the leader of al-Qaeda – Ayman al-Zawahiri – has finally been brought to justice.
— Barack Obama (@BarackObama) August 2, 2022
இந்த சம்பவம் 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல செய்தியாக அமைந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வை முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார். அதிபர் ஜோ பைடனின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வைப் பற்றி ஒபாமா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆப்கானிஸ்தானுடன் போர் வராமல் தீவிரவாதத்தை முறியடிக்கமுடியும் என்று நிறுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அல்கொய்தாவால் இன்னல்கள் அனுபவித்த மக்களுக்கும் சிறிது அளவில் நிம்மதியளிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொன்ற ஜோ பைடன் தலைமையையும் அவரின் சிறப்பாற்றலையும் பாராட்டியுள்ளார். 9/11 தாக்குதல் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது ஒசாமா பின்லேடனுக்கு அடுத்து அல்கொய்தாவிற்கு தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி கொன்றது நிதியளித்துள்ளது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Barack Obama, Joe biden, Osama bin Laden, Terrorists