காதல் மோதிரத்தை தொலைத்த ஜோடி... விவேகமாக செயல்பட்ட போலீஸ்...

காதல் ஜோடியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாரருக்கு பொதுமக்கள் மிகுந்த உதவியாக இருந்தனர். இதனால், விரைவிலேயே சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

Web Desk | news18
Updated: December 4, 2018, 10:03 AM IST
காதல் மோதிரத்தை தொலைத்த ஜோடி... விவேகமாக செயல்பட்ட போலீஸ்...
தொலைந்த மோதிரம்
Web Desk | news18
Updated: December 4, 2018, 10:03 AM IST
நிச்சயதார்த்த மோதிரத்தை தொலைக்கும் ஜோடியின் வீடியோவை சிசிடிவி மூலம் பார்த்த போலீசார், மோதிரத்தை கண்டெடுத்ததோடு அதனை தொலைத்த ஜோடியையும் தீவிர முயற்சிக்குப் பின் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம் ஸ்கொயர் பகுதி, மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தப் பகுதியின் ஆங்காங்கே காதலி முன் மண்டியிட்டு காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவதையும் காணலாம்.

பிரிட்டனைச் சேர்ந்த காதல் ஜோடி நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். டைம் ஸ்கொயர் பகுதியில் ஒரு முறை வருங்கால மனைவி முன் மண்டியிட்டு மோதிரம் போட்டுவிட்டால் தனது முக்கிய கடமை முடிந்துவிடும் என்று நினைத்த இளைஞர், மோதிரத்தை வெளியே எடுக்கவே, அது தவறிப்போய் சுரங்கப்பாதைக்கான வெண்டிலேட்டர் குழியில் விழுந்தது.

எவ்வளவு முயன்றும் எடுக்க முடியாததால், ஏமாற்றத்தில் அந்த ஜோடி சொந்த ஊருக்கு திரும்பியது. இந்த காட்சியை சில நாட்கள் கழித்து சிசிடிவி மூலமாக பார்த்த போலீசார், மோதிரத்தை மீட்டெடுத்தனர்.

ஆனால், தொலைத்த ஜோடியை கண்டறிவதில் சிக்கல் இருந்தது. இதனால், ட்விட்டரில் அந்த வீடியோ காட்சியை பதிவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிய உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.நியூயார்க் போலீசாரின் கோரிக்கைக்கு பலத்த வரவேற்பு இருந்தது. சுமார் 31 ஆயிரம் பேர் அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்தனர். இதற்கு பலனாக, மோதிரத்தை தொலைத்த ஜோடி போலீசாரை அணுகி தங்களது இருப்பிடத்தை கூறியுள்ளனர்.“ஆள கண்டுபிடிச்சாச்சு.. மோதிரத்த திரும்பி அனுப்பும் வேலை நடக்குது. ரீ-ட்வீட் செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி” என நியூயார்க் போலீசார் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.

Also See.. செல்ல மகளிடம் நடனம் கற்கும் தோனி (வீடியோ)

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...