இந்தோனேசியா தனது தலைநகரான ஜகார்த்தாவுக்கு பதிலாக இந்து மத பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்த ‘நுசந்தரா’ நகரை தனது புதிய தலைநகரமாக அறிவித்து அதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.
மக்கள் தொகையில் உலகின் 7வது பெரிய நாடாக திகழும் இந்தோனேசியாவில் 86% மேல் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அதிக இஸ்லாமிய மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பெருமையும் இந்தோனேசியாவுக்கு உள்ளது. 17,000க்கும் அதிகமாக தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய தீவு நாடாகவும் விளங்கி வருகிறது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா, ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ளது.
தலைநகர் மாற்றம் ஏன்?
உலகிலேயே மிக வேகமாக தண்ணீருக்கு அடியில் சென்றுகொண்டிருக்கும் நகரமாக ஜகார்த்தா திகழ்கிறது. இந்தோனேசிய மக்கள் தொகையில் பாதியளவுக்கு ஜாவா கொண்டுள்ளது. ஜகார்த்தாவின் மக்கள் தொகை மட்டும் 30 மில்லியனுக்கும் அதிகம் என 2018 மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜகார்த்தா நகர் நீரில் மூழ்கி வருவது இந்தோனேசியா அடுத்த 30 ஆண்டுகளில் முழுமையாக நீரில் மூழ்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது.. இதனையடுத்து ஜகார்த்தாவுக்கு பதிலாக வேறு ஒரு நகரை தலைநகராக்க முடிவு செய்யப்பட்டு Borneo தீவின் நுசந்தரா நகரை புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்த சட்டமும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நுசந்தரா - இந்து மத தொடர்பு:
புதிய தலைநகரான நுசந்தரா, இந்து மத பாரம்பரியம் கொண்டதாகும். இந்தோனேசியாவில் இந்துக்கள் சிறுபான்மையினராக (1.74%) வசித்து வந்த போதிலும் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தோனேசியாவும் அகண்ட இந்து தேசமாக இருந்துள்ளது.
Also read: இனி மாஸ்க் அணிய வேண்டாம் - கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் இங்கிலாந்து அரசு
முதலாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக்கு வருகைதந்த சாமியார்கள், இந்தியர்களினால் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. இது 16ம் நூற்றாண்டு வரை நீடித்தது. அதன் பிறகு இஸ்லாமிய அரசர்கள் பிரவேசத்தால் இந்தோனேசியாவில் இஸ்லாம் சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது. மஜாபாஹித் என்பது தான் இந்தோனேசியாவின் கடைசி இந்து சாம்ராஜ்யம் ஆகும். பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடன் தான் இந்தோனேசியாவின் தேசிய சின்னமாக இருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
ஜாவாவை மையமாக கொண்டு இயங்கி வந்த மஜாபாஹித் சாம்ராஜ்யத்தின் இந்து அரசர் ஹயம் வுருக் தலைமையிலான அரசின் பிரதம மந்திரியாக திகழ்ந்த கஜா மட ஒட்டுமொத்த ‘நுசந்தரா’-வையும் கைப்பற்றாமல் உணவில் மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டார். நுசந்தரா என்பது சிங்கப்பூர், மலேசியா, புருனே, தெற்கு தாய்லாந்து, கிழக்கு தைமோர், தெற்கு பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளையும் உள்ளடக்கியதாகும். சொன்னது போலவே நுசந்தராவை கைப்பற்றி அகண்ட சாம்ராஜ்யத்தை நிறுவி இந்தோனேசிய சரித்திரத்தில் வரலாற்று நாயகனாக இடம்பிடித்தார் கஜா மட.
Also read: கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோ
இந்தோனேசியாவில் கணிசமான அளவுக்கு இந்துக்கள் வசித்து வரும் பகுதியாகவும் நுசந்தரா விளங்குகிறது.
இந்தோனேசியாவின் புதிய தலைநகராக்கப்படும் நுசந்தரா 216 சதுர மைல் பரப்பளவில் 32 பில்லியன் டாலர்கள் பொருட்செலவில் மிகப்பெரிய நகரமாக கட்டமைக்கப்பட உள்ளது. ஒராங்குட்டான் குரங்கு இனம் பெரும்பான்மையாக வசிக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிகளை அழித்து இந்த நகரம் கட்டமைக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்நகரம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது.
Also read: கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பேட் நியூஸ்
இந்தோனேசியா மட்டுமல்லாது ஏற்கனவே பிரேசில், மியான்மர், எகிப்து, கஜகஸ்தான் போன்ற நாடுகளும் ஏற்கனவே தலைநகரங்களை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.