கொரோனா பாதுகாப்பு உடைக்குள்ளே உள்ளாடை மட்டும் அணிந்து பணி செய்த செவிலியர் பணியிடை நீக்கம்!

கவச உடை கண்ணாடி போல இருக்கும் என்பதை கவனிக்க மறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதுகாப்பு உடைக்குள்ளே உள்ளாடை மட்டும் அணிந்து பணி செய்த செவிலியர் பணியிடை நீக்கம்!
கண்ணாடி போன்ற முழு உடல் பாதுகாப்புக் கவசத்துடன் செவிலி.
  • Share this:
ரஷ்யாவில் கண்ணாடி போன்ற முழு உடல் பாதுகாப்புக் கவசத்துடன் உள்ளாடை மட்டுமே அணிந்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட செவிலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோ அருகே துலா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கண்ணாடி போன்ற பாதுகாப்பு கவசத்துடன் உள்ளாடை மட்டுமே அணிந்து செவிலி ஒருவர் பணிபுரிந்தார்.

முழு பாதுகாப்புக் கவச உடையால் உடல் கடுமையாக சூடாவதை தவிர்க்கவே உள்ளாடை மட்டும் அணிந்திருந்ததாகவும், கவச உடை கண்ணாடி போல இருக்கும் என்பதை கவனிக்க மறந்துவிட்டதாகவும் அந்த செவிலி தெரிவித்துள்ளார். அவர் சிகிச்சை அளிக்கும்போது அந்த அறையில் இருந்த மற்றொரு நோயாளி செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ளார்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading