இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளாக இருந்துவருகின்றன. அணு ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைத் தடை செய்யவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் இருந்துவருகின்றன. சர்வதேச அளவில் ஏராளமான செயற்பாட்டாளர்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவந்தனர். அணு ஆயுதங்களுக்கு எதிரான செயற்பாட்டர்கள் எடுத்த முன்னெடுப்பின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை அணு ஆயுததைத் தடை செய்யும் ஒப்பந்ததைக் கொண்டு வந்தது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட அணு ஆயுத நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்தன. அந்த ஒப்பந்தத்துக்கு வெள்ளிக்கிழமை வரை 49 நாடுகள் ஒப்புதல் அளித்திருந்தன.
இந்தநிலையில், மத்திய அமெரிக்க நாடான ஹாண்ட்ரஸ்(Honduras) 50-வது நாடாக நேற்று ஒப்புதல் அளித்தது. அதன்மூலம், ஐ.நாவின் அணு ஆயுத தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா கட்ரஸ், ‘அணு ஆயுத தடை ஒப்பந்தம் ஜனவரி 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அணு ஆயுத வெடிப்பு, சோதனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஒப்பந்தம் சமர்பணம். இந்த ஒப்பந்தம், மொத்த அணு ஆயுதங்களையும் ஒழிக்கும் அர்த்தமுள்ள ஒன்றை முன்னெடுக்கிறது.
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி 50 ஆண்டுகளில் 315 ஆணு ஆயுத சோதனைகள் நடைபெற்றுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் பெரும்பாலும் ஆணு ஆயுதங்களை சோதனை செய்ய, அவர்கள் ஆட்சி புரிந்த பிற நாடுகளின் பகுதிகளைப் பயன்படுத்திக்கொண்டன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஐந்து முக்கிய அணு ஆயுத நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த ஒப்பந்தம் சட்டமாகும்.
ஆணு ஆயுத தடைச் சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், அணு ஆயுதங்களை வைத்திருப்பது என்பது அறமற்றது என்பதைக் கடந்த சட்டவிரோதமானது ஆகும். அணுகுண்டு வெடிப்பால் ஹிரோஷிமா, நாகசாகி பாதிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தச் சட்டம் வருவதற்கு அணு ஆயுதத்துக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nuclear, United Nation