உங்கள் மரணம் எப்போது நிகழும்..?- அமெரிக்க மருத்துவர்கள் வெளியிட்ட மரண கால்குலேட்டர்..!

முழு உடல் பரிசோதனையின் அடுத்தகட்ட முயற்சியே இந்த மரண கால்குலேட்டர் என்கின்றனர் மருத்துவர்கள்.

உங்கள் மரணம் எப்போது நிகழும்..?- அமெரிக்க மருத்துவர்கள் வெளியிட்ட மரண கால்குலேட்டர்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 6, 2019, 3:35 PM IST
  • Share this:
அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மரண கால்குலேட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த மரண கால்குலேட்டர் என்பது மக்களுக்கான ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்பதே இந்த மருத்துவர்களின் முக்கிய நோக்கம் ஆக உள்ளது. இன்றைய ’பாஸ்ட் புட்’ உணவுக் கலாச்சாரத்தில் மக்களுக்கு இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இருதய பாதிப்புகள், கிட்னி பாதிப்பு ஆகியன ஏற்படுவது சகஜமாகி வருகிறது.

இந்த ஆராய்ச்சி மருத்துவர்களின் கால்குலேட்டர் மனித உடலில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் ஆராய்கிறது. சர்க்கரை, ரத்த பரிசோதனை என அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. உணவு முறை பரிந்துரை, வாழ்க்கை வடிவமைப்பு ஆகியன குறித்த போதனைகளையும் வழங்குகிறது.


மக்கள் அன்றாடம் தாங்கள் செய்யும் உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள தவறு, வாழ்க்கை முறை தவறுகள் ஆகியன காணொளி விளக்கத்துடன் மக்களுக்கு எடுத்து உரைக்கப்படுகின்றனர். முழு உடல் பரிசோதனையின் அடுத்தகட்ட முயற்சியே இந்த மரண கால்குலேட்டர் என்கின்றனர் மருத்துவர்கள்.

Also see:

 
First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்