மூன்று மாதம் பகல்... மூன்று மாதம் இரவு!- அதிசயிக்க வைக்கும் விநோதத் தீவு!

இந்தத் தீவை ‘கால நேரம் அற்ற தீவு’ என்று அரசு அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கையெழுத்து கோரிக்கை வைத்துள்ளனர்.

Web Desk | news18
Updated: June 20, 2019, 5:00 PM IST
மூன்று மாதம் பகல்... மூன்று மாதம் இரவு!- அதிசயிக்க வைக்கும் விநோதத் தீவு!
மேற்கு ட்ரோம்சோ தீவு
Web Desk | news18
Updated: June 20, 2019, 5:00 PM IST
நார்வே நாட்டில் உள்ள ஒரு தீவில் கடந்த ஒரு மாதமாக பகல் பொழுது மட்டுமே நிலவி வருகிறது.

வடக்கு நார்வே பகுதியில் உள்ளது மேற்கு ட்ரோம்சோ தீவு. இந்தத் தீவு ஆர்டிக் வட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கடந்த மே 18-ம் தேதி முதல் இந்தத் தீவில் மட்டும் சூரியன் மறையவே இல்லை.

சூரியன் மறையாத இந்தத் தீவை அப்பகுதி மக்கள் ‘கோடைத்தீவு’ என்றே அழைக்கின்றனர். இந்தப் பகல் காலம் ஜூலை 26-ம் தேதி வரை தொடரும் என்கிறனர் அறிவியல் ஆய்வாளர்கள். இதேபோல், இந்தத் தீவில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சூரியனே உதிக்காதாம்.


சூரியன் உதிக்காத மூன்று மாத காலத்தை ‘நீண்ட போலார் இரவுகள்’ என்று அழைக்கின்றனர் நார்வே மக்கள். இந்தத் தீவில் சுமார் 300 மக்கள் வசிக்கின்றனர். நீண்ட பகல், நீண்ட இரவு கொண்ட இந்தத் தீவை ‘கால நேரம் அற்ற தீவு’ என்று அரசு அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கையெழுத்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் மூலம் இம்மக்களுக்கு பள்ளி, கல்லூரி, அலுவலக நேர விதிமுறைகளில் தளர்வு கிடைக்கும். இதனாலே நார்வே நாடாளுமன்றத்துக்கு இந்தக் கோரிக்கையை கொண்டு செல்கின்றனர் அந்தத் தீவின் மக்கள்.

மேலும் பார்க்க: நம்பகமான கரன்ஸியா ஃபேஸ்புக் ‘லிப்ரா’?
First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...