சுற்றுலா கப்பலில் என்ஜின் பழுது; நடுக்கடலில் தத்தளித்த 1,300 பயணிகள்!

கப்பல் விபத்தில் சிக்கியதை அறிந்த போதும் வானிலை சாதகமாக இல்லாததால் மீட்பு பணி தாமதமானது.

Tamilarasu J | news18
Updated: March 25, 2019, 11:00 AM IST
சுற்றுலா கப்பலில் என்ஜின் பழுது; நடுக்கடலில் தத்தளித்த 1,300 பயணிகள்!
நார்வே கப்பல்
Tamilarasu J | news18
Updated: March 25, 2019, 11:00 AM IST
நார்வேயில் நடுக்கடலில் இன்ஜின் பழுதால் கப்பலில் தத்தளித்த ஆயிரத்து 300 பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நார்வேயில் 'வைகிங் ஸ்கை' கப்பலில் கடந்த 14-ம் தேதி ஆயிரத்து 300 பயணிகள் சுற்றுலா புறப்பட்டனர். நார்வேயில் உள்ள கடற்கரையோர நகரங்களை பார்த்து ரசித்து வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு மோல்டு பகுதிக்கும் கிறிஸ்டான்சண்ட் பகுதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென புயல் காற்று வீசியதால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

அப்போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் கப்பல் நடுக்கடலில் தத்தளித்தது. கடல் அலை 8 அடி உயரத்திற்கு எழும்பியதால் கப்பல் மூழ்கிவிடுவது போன்ற அபாயம் ஏற்பட்டது. கப்பலுக்குள் இருந்த மேசை, நாற்காலிகள் நாலாபுறமும் சிதறியதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

கப்பல் விபத்தில் சிக்கியதை அறிந்த போதும் வானிலை சாதகமாக இல்லாததால் மீட்பு பணி தாமதமானது. இதனால், பயணிகள் வேறு வழியின்றி கப்பலிலேயே இரவை கழித்தனர்.

காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் மீட்புப் பணி தொடங்கப்பட்டது. 5 ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயிரத்து 300 பயணிகளும் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் காயமடைந்த பயணிகள் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புயல் பாதிப்பில் சிக்கிய வைகிங் ஸ்கை கப்பல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணியில் கப்பல் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
Loading...
மேலும் பார்க்க:
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...