லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வடகொரியாவில் வாழ முடியும்- ஐ.நா

வடகொரியா ஐநா அறிக்கையை அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை என விமர்சித்துள்ளது.

Web Desk | news18
Updated: May 28, 2019, 8:50 PM IST
லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வடகொரியாவில் வாழ முடியும்- ஐ.நா
வடகொரியா
Web Desk | news18
Updated: May 28, 2019, 8:50 PM IST
’வடகொரியாவில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வாழ முடியும். அங்கு லஞ்சம் என்பது பரவிக்கிடக்கிறது. அடக்குமுறைகள் நிறைந்து உள்ளது’ என ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையையே நகர்த்த சிரமப்படும் மக்களிடமிருந்து வடகொரிய அதிகாரிகள் லஞ்சமாக பணம் வசூலிப்பதாகவும் தராதவர்களை போலிஸ் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டுவதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வடகொரியா, ஐநா அறிக்கையை அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை என விமர்சித்துள்ளது. இதுகுறித்து ஐநா மனித உரிமை உயர் ஆணையாளர் மைக்கேல் பேச்லெட் கூறுகையில், “பல லட்சம் வடகொரிய மக்களின் மனித உரிமையைக் கூட கவனிக்கை முடியாத வகையில் அந்நாடு அணுஆயுதத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


வடகொரியாவில் 10-ல் 4 பேருக்கு, அதாவது 10.1 மில்லியன் மக்கள் போதிய உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் ஐநா குற்றம் சுமத்தியுள்ளது. உயர் ஆணையாளர் மைக்கேல் கூறுகையில், “உணவு, சுகாதாரம், இருப்பிடம், பணி, நகர்வதற்கான உரிமை, சுதந்திரம் என அத்தனை மனித உரிமைகளும் அனைவருக்குமானது. தடுக்க முடியாதது. ஆனால், வடகொரியாவைப் பொறுத்த வரையில் தனி ஒரு மனிதனுக்கு காவல்துறை அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து சரிகட்டினால் மட்டுமே இந்த உரிமைகள் எல்லாம் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: பிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...! ரூ.26.5 லட்சம் சம்பளமாம்
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...