வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், உரத்தொழிற்சாலை ஒன்றை தொடங்கி வைத்த புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடைபெற்ற வடகொரிய நிறுவனரும் கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதய அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால் கிம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் 20 நாட்கள் இடைவெளிக்குப் பின் உரத்தொழிற்சாலை ஒன்றின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டதாக வடகொரிய ஊடகம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அங்கிருக்கும் மத்திய வானொலி ஒன்றில் கிம் மீண்டும் தோன்றியது குறித்து பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Kim Jong Un's reappearance led the 6am news on Korean Central Radio. Here's the best recording I got (with black video because Twitter won't let me upload audio only) pic.twitter.com/LNYWmywgvd
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.