ஹோம் /நியூஸ் /உலகம் /

குழந்தைகளுக்குப் பதிலாக புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை! பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த வடகொரிய அரசு

குழந்தைகளுக்குப் பதிலாக புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை! பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த வடகொரிய அரசு

வட கொரியத் தலைவர்கள் புகைப்படம்

வட கொரியத் தலைவர்கள் புகைப்படம்

இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரியவந்தநிலையில், புகைப்படத்தை எரியவிட்ட குற்றத்துக்கு குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  வட கொரியாவில் தீப் பிடித்து எரிந்த வீட்டிலிருந்து, அந்நாட்டின் முன்னாள் தலைவர்களின் புகைப்படத்தைக் காப்பதற்கு பதிலாக குழந்தைகளைக் காப்பாற்றிய தாய்க்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

  வடகொரிய நாட்டின் ஒரே அதிபராக கிம் ஜான் உன் உள்ளார். அந்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்கள் வீட்டிலும் அந்நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர்களான கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு வீட்டிலும் மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்வார்கள்.

  அதேபோல, புகைப்படத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த வீட்டின் உரிமையாளருக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தநிலையில், வடகொரியாவின் வடக்கு ஹாம்யாங் மாகணத்தில் ஒரே வீட்டில் இரண்டு குடும்த்தினர் வசித்துவருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்களது வீட்டில் தீ பிடித்துள்ளது. அந்த நேரத்தில் இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோர்களும் வீட்டில் இல்லை. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டவர்கள் வேகமாக விரைந்துவந்து வீட்டிலிருந்த குழந்தைகளைக் காப்பாற்றினர்.

  அப்போது வீட்டிலிருந்து தலைவர்களின் புகைப்படங்கள் தீயில் எரிந்தன. இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரியவந்தநிலையில், புகைப்படத்தை எரியவிட்ட குற்றத்துக்கு குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். மேலும், புகைப்படத்தைக் காப்பாற்றாமல் குழந்தைகளைக் காப்பாற்றினார் என்பது நிரூபிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு பிணையில் வரமுடியாத கடுமையான பணிகளுடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: North korea