• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Netflix வெப்சீரிஸ் தொடர் பார்த்த வடகொரிய மாணவருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு மரண தண்டனை

Netflix வெப்சீரிஸ் தொடர் பார்த்த வடகொரிய மாணவருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு மரண தண்டனை

Squid Game

Squid Game

அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து படங்கள், வீடியோ தொடர்களை வட கொரியாவுக்குள் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டுவருபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க இயலும்.

  • Share this:
வடகொரியாவில் வெப் சீரிஸ் பார்த்த குற்றத்திற்காக மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் பல மாணவர்களுக்கு கடுமையான சிறை தண்டனையும், ஒருவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடும் தண்டனைகளுக்கு பெயர் போன நாடு வடகொரியா. அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி பலமுறை அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவருகிறார். மேலும் அவர் சர்வாதிகார போக்குடன் ஆட்சி நடத்தி வருவதாகவும், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உயர் அரசு அலுவலர்களின் சிறிய குற்றங்களுக்கு கூட கடும் தண்டனைகளை கொடுத்து கவனத்தை ஈர்த்தவர்.

தற்போதைய சூழலில் உலக நாடுகளில் இருந்து வடகொரியா தனித்தீவாகவே இருந்து வருகிறது. அங்கு கடும் சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன. சினிமா, பொழுதுபோக்கு உள்ளிட்ட கேளிக்கைகள் என்பது அங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், புகழ்பெற்ற நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரிஸான ‘ஸ்குவிட் கேம்’ தொடரை சட்டவிரோதமாக பென் ட்ரைவில் வட கொரியாவுக்குள் கடத்தி வந்து அதை பென் ட்ரைவ் மூலம் விற்பனை செய்தவருக்கு தூக்கு தண்டனையும், அந்த வெப் தொடரை பார்த்த பள்ளி மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளையும் அந்நாட்டு அரசு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Squid Game


நெட்ஃபிளிக்ஸில் இதுவரை வெளியான தொடர்களிலேயே மிகவும் ஹிட்டான தொடராக இருப்பது கடந்த செப்டம்பர் 17 அன்று வெளியான ‘ஸ்குவிட் கேம்’ தான். தென்கொரிய இயக்குனர் ஹுவாங் டோங் ஹூக் உருவாக்கிய ஸ்குவிட் கேம், அதுவரை நெட்ஃபிளிக்ஸில் வெளியானவற்றிலேயே மிகவும் ஹிட் தொடராக இருந்த ஆங்கிலத் தொடர் பிரிட்ஜர்டன் (82 மில்லியன் பார்வைகள்) தொடரை பின்னுக்குத் தள்ளி மிகவும் புகழ்பெற்ற தொடராக 111 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

Also read:  குழந்தையின் உயிர்காக்க விஞ்ஞானியாக மாறிய தந்தை.. பள்ளிப்படிப்பை தாண்டாதவர் வீட்டிலேயே மருந்து தயாரித்து அசத்தல்..

இதனிடையே சீனா சென்று திரும்பிய வடகொரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்குவிட் கேம் தொடரின் பிரதியை பென் ட்ரைவ் மூலம் தனது நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார். மேலும் அத்தொடரை அவர் பென் ட்ரைவ்களில் பிரதியெடுத்து ரகசியமாக விற்பனை செய்தும் வந்திருக்கிறார். இவரிடம் ஸ்குவிட் கேம் தொடர் இருந்த பென் ட்ரைவை வாங்கிய பள்ளி மாணவர் ஒருவர், பள்ளியில் தனது நெருங்கிய நண்பருடன் சேர்ந்து அத்தொடரை பார்த்திருக்கிறார்.

அந்த நண்பர் இந்த சீரிஸ் குறித்து ஆகா ஓகோ என புகழ்ந்து பேசியதால் பிறரும் அத்தொடரை பார்க்க வேண்டும் என தங்களின் ஆவலை வெளிப்படுத்தியதால் அந்த பென் ட்ரைவை சில மாணவர்களுடன் அந்த மாணவர் பகிர்ந்திருக்கிறார். மாணவர்கள் இப்படி ரகசியமாக வெப் தொடர் பார்த்தது ரகசிய ஏஜெண்டுகள் மூலம் அரசின் கவனத்துக்கு சென்றது.

Also read:  சமந்தாவுக்கு முன் ஸ்ருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பிய நாகசைத்தன்யா?

இது குறித்து வடகொரிய அரசு விசாரணை நடத்தியது. வடகொரியாவை பொறுத்தமட்டில் புதிய சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டுவந்திருக்கிறது. அதன்படி அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீடியோக்களை தொடர்களை வட கொரியாவுக்குள் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டுவருபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க இயலும்.

US Is North Korea's "Biggest Enemy", Says Kim Jong Un: Report
Kim jong un


இந்த சட்டத்தின் கீழ் தற்போது அதிரடி தண்டனைகளை வடகொரிய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, வட கொரியாவுக்குள் தடை செய்யப்பட்ட வெப் தொடரை கொண்டு வந்த நபருக்கு மரண தண்டனையும், அந்த நபரிடம் இருந்து வெப் தொடர் அடங்கிய பென் ட்ரைவை வாங்கிய பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனையும். சம்பந்தப்பட்ட மாணவரின் பென் ட்ரைவை வாங்கி வீடியோ சீரிஸ் பார்த்த 6 மாணவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை துப்பாக்கிச்சூடு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது தவிர பள்ளியின் தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் உள்ளிட்டவர்கள் பணி நீக்கம் செய்து வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியாவில் மாணவர்களுக்கு இது போன்ற கடும் தண்டனைகல் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: