வடகொரியா - தென்கொரியா மோதல்: தயார் நிலையில் ராணுவம்..
வடகொரியா - தென்கொரியா நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளை களைய உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனைக்கு பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் உள்ளது.

கிம் ஜாங் உன்
- News18 Tamil
- Last Updated: June 18, 2020, 12:04 PM IST
வடகொரியா - தென்கொரியா நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளை களைய உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனைக்கு பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் உள்ளது.
வடகொரியாவிலிருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் அங்கு சர்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது நிறுத்தப்படவில்லை என்றால் அந்நாட்டுனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் உள்நாட்டிலேயே வடகொரியாவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்ப்படுத்த 2018 ஆம் ஆண்டு வடகொரியாவின் ஹேசாங் நகரில் கட்டப்பட்ட கொரிய தகவல் தொடர்பு கட்டிடத்தை வடகொரிய அரசு நேற்று வெடிகுண்டு வைத்து தகர்த்தது. இதனால், வட மற்றும் தென்கொரியா இடையே பதற்றம் ஏற்பட்ட்டுள்ளது. அந்த கட்டிடம் அமைந்திருந்த பகுதி டி மிலிட்டரைஸ்டு சோன் எனப்படும் ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட இரு நாடுக்கும் பொதுவான பரஸ்பர இடமாகும். அப்பகுதியில் முன்னதாக இரு நாடுகளை சேர்ந்தவர்களும் பணி செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா கோரிக்கை விடுத்தது. மேலும், தங்கள் நாட்டு தூதர்களை அனுப்பவும் விருப்பம் தெரிவித்தது. ஆனால், தென்கொரியாவின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்தையும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் தென்கொரியா தன் பங்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க...
இந்தியா- சீனா மோதல்: இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ளும் என ரஷ்யா நம்பிக்கை
அத்துடன் டி மிலிட்டரைஸ்டு சோனில் படைகளை குவிப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளதால் தற்போது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
வடகொரியாவிலிருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் அங்கு சர்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது நிறுத்தப்படவில்லை என்றால் அந்நாட்டுனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் உள்நாட்டிலேயே வடகொரியாவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்ப்படுத்த 2018 ஆம் ஆண்டு வடகொரியாவின் ஹேசாங் நகரில் கட்டப்பட்ட கொரிய தகவல் தொடர்பு கட்டிடத்தை வடகொரிய அரசு நேற்று வெடிகுண்டு வைத்து தகர்த்தது.