எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் ஏவுகனை சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கை, பொருளாதார கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது. தற்போது, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏவுகனை ஒன்றை அந்நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இதனை பார்வையிட்ட கிம் ங், ஏவுகனை திட்டத்தில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பாராட்டினார். பின்னர் பேசிய அவர், 'யாரிடம் ஆயுதங்கள் வலிமையாக இருக்கின்றனவோ, அவர்களை யாரும், எந்த நாடும் தாக்க மாட்டார்கள். எந்த நாட்டின் ராணுவமும் அவர்களை தாக்க பயப்படும்.
நாட்டை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே போரை தடுத்து நிறுத்த முடியும். வடகொரியா தொடர்ந்து தன்னிடம் உள்ள ஆயுதங்கள் செறிவூட்டும். இதனால் மட்டும்தான் வடகொரியாவால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். அமெரிக்கா கூட எங்களை தாக்க பயப்படுகிறது என்றால் அதற்கு இதுதான் காரணம்.' என்று தெரிவித்தார்.
ஐ.சி.பி.எம். எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ஏவுகனைகளை வடகொரியா அதிக எண்ணிக்கையில் வைத்துள்ளது. இதன் மூலம் வடகொரியாவால் அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியும்.
இதையும் படிங்க - ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஜோ பைடன் எச்சரிக்கை
இந்த கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகனைகள் உள்ளிட்டவற்றை தங்களிடம் ஒப்படைத்து விட்டு அணு ஆயுத குறைப்பில் ஈடுபட வேண்டும் என்று வடகொரியாவை அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது. வியாழன் அன்று வடகொரியா ஹுவாசாங் 17 என்ற ஏவுகனையை சோதித்தது. இது முன்பு சோதிக்கப்பட்ட அனைத்து ஏவுகனைகளை விட அதிக தூரம் மற்றும் உயரம் சென்றதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.