ராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு: இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு ரத்தாகுமா?

news18
Updated: May 16, 2018, 10:34 AM IST
ராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு: இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு ரத்தாகுமா?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங்
news18
Updated: May 16, 2018, 10:34 AM IST
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  உடனான சந்திப்பை ரத்து செய்து விடுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக அணுஆயுத சோதனையை மேற்கொண்டு வந்த வடகொரியா அதனை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் முடிவுக்கு வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஆகிய இருவரும் வரும் ஜூன் 12ல் சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதைக் காரணம் காட்டி தென்கொரிய அதிகாரிகளுடனான உயர் மட்டப் பேச்சுவார்த்தையுயும் வடகொரியா ரத்து செய்துள்ளது.

இதேநிலை தொடர்ந்தால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கிம் ஜோங் உன் சந்தித்துப் பேச மாட்டார் எனவும் வடகொரியா எச்சரித்துள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அரசு திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறும் எனவும், தென்கொரியா உடனான ராணுவ பயிற்சியின் முக்கியத்துவத்தை வடகொரியா விரைவில் உணரும் என்றும் தெரிவித்துள்ளது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்