முகப்பு /செய்தி /உலகம் / வடகொரியாவில் ஒரே வாரத்தில் 20 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு..!

வடகொரியாவில் ஒரே வாரத்தில் 20 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு..!

வடகொரியா கொரோனா

வடகொரியா கொரோனா

North korea | வடகொரிய அரசு வெளியிட்டிருக்கும் தரவுகளில் நம்பகதன்மை இல்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வட கொரியாவில் 20 லட்சம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உலகளாவிய தொற்றுநோயாக பரவத் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வியாழக்கிழமை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரைவட கொரியா உறுதிப்படுத்தியது. அதனை தொடர்ந்து அங்கு மின்னல் வேகத்தில் தொற்று பரவி வருகிறது. புதன் கிழமை ஒரே நாளில் 2 ,62,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை 63 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 20 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 7.40,000 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் .பெரும்பாலானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்

வடகொரியாவிடம் போதிய பரிசோதனை அமைப்பு இல்லாததால், காய்ச்சல் இருக்கும் நபர்களுக்கு கொரோனா உள்ளதா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. அறிகுறிகளை மட்டுமே வைத்து தொற்று ஆளானவர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர்.

வடகொரிய அரசு வெளியிட்டிருக்கும் தரவுகளில் நம்பகதன்மை இல்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மாத்திரைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் பிற மருத்துவ வசதிகள் இல்லாமல் அந்நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எனினும் மற்ற நாடுகள் அளிக்கும் மருத்துவ உதவிகளை ஏற்பது குறித்தும் வடகொரிய அதிபர், பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சேவைகளை அளிக்க ராணுவத்தினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர். 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில், பெரும்பாலான மக்கள் கெரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை

First published:

Tags: Corona, CoronaVirus, Kim jong un, North korea