கடந்த 20 நாட்களாக பொதுவெளியில் தென்படாமல் இருந்த வடகொரிய அதிபர் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதாக வந்த செய்தியை பல்வேறு தரப்பினரும் உற்று நோக்கி வருகின்றனர்.
கிம் கலந்துகொண்ட விழா தொடர்பான புகைப்படங்களை ஆராயும்போது கிம்மின் தங்கை கிம் யோ ஜாங் சற்றே கூடுதல் ஒப்பனையோடு வந்திருப்பதாகவும், இது அதிகாரத்தில் அவருக்கு உயர்பதவி வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாகவும் யூகிக்கின்றனர்.
புகைப்படத்தில் ஒருவர் மாஸ்க் அணிந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், வடகொரியாவில் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்கின்றனர். உரத்தொழிற்சாலை என்கிற பெயரில் வடகொரியாவின் ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தைத் தயாரிக்கும் ஆலையாக இது இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.