ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்யாவுடன் ஆயுத பரிவர்த்தனையா? அமெரிக்கா மீது கடுப்பான வடகொரியா!

ரஷ்யாவுடன் ஆயுத பரிவர்த்தனையா? அமெரிக்கா மீது கடுப்பான வடகொரியா!

வடகொரியா

வடகொரியா

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ஒருங்கிணைந்த விமானப் பயிற்சியைத் தொடர்ந்து வட கொரியா பல ஆயுத சோதனைகளை நடத்தியதை அடுத்து இந்த விமர்சனம் வந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • chennai |

  வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆயுத பரிவர்த்தனைகள் இருப்பதாக ஆதாரமற்ற வதந்தியை அமெரிக்கா தொடர்ந்து பரப்பி வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.

  மத்திய கிழக்கு அல்லது ஆப்பிரிக்காவிற்கு செல்வது போல் தரவுகளை ஏற்படுத்தி பீரங்கிகளை வடகொரியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கடந்த வாரம் கூறியிருந்தார்.

  அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ஒருங்கிணைந்த விமானப் பயிற்சியைத் தொடர்ந்து வட கொரியா பல ஆயுத சோதனைகளை நடத்தியதை அடுத்து இந்த விமர்சனம் வந்துள்ளது.

  இதற்கு பதிலளிக்கும் விதமாக வடகொரியா நாட்டின் அரசு நிறுவனமான KCNA ஆல் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில், "ரஷ்யாவுடன் நாங்கள் ஒருபோதும் 'ஆயுத பரிவர்த்தனை' செய்ததில்லை என்பதையும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்யும் திட்டம் எங்களிடம் இல்லை என்பதையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறோம்." என்று குறிப்பிட்டது.

  இதையும் படிங்க: காட்டுத்தீ.. வெப்பக்காற்று.. 15,000 பேரை பலிவாங்கிய வெப்ப அலை.. ஷாக் தகவல்கள்!

  வட கொரியாவின் இராணுவ வெளியுறவுத் துறையின் துணை இயக்குனரின் அறிக்கையில் "சமீபத்தில், அமெரிக்கா DPRK மற்றும் ரஷ்யா இடையே ஆதாரமற்ற 'ஆயுத பரிவர்த்தனைகள்' பற்றிய வதந்தியை தொடர்ந்து பரப்புகிறது. ஆனால் இதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. எங்களுக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை. இதுவென் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஆனால் அமெரிக்க உள்ளே நுழைந்ததில் இருந்து வடகொரியா தென்கொரியா இடையே பனிப்போர் . தென்கொரியாவை அச்சுறுத்த சுமார் 20 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: America, North korea, Russia