ஹோம் /நியூஸ் /உலகம் /

துண்டுப் பிரசுரங்களால் வெடித்த மோதல்... எதிரியான தென் கொரியா... உறவை துண்டித்த வட கொரியா

துண்டுப் பிரசுரங்களால் வெடித்த மோதல்... எதிரியான தென் கொரியா... உறவை துண்டித்த வட கொரியா

வர கொரிய தென் கொரிய தலைவர்கள்

வர கொரிய தென் கொரிய தலைவர்கள்

தென் கொரியாவுடனான அனைத்து தொலைத்தொடர்புகளையும் இன்று மதியத்துடன் துண்டிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தென் கொரியாவை இன்று முதல் தனது எதிரியாக கருதப்போவதாக வட கொரியா அதிரடியாக கூறியுள்ளது. வடகொரியாவிலிருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் அங்கு சர்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது நிறுத்தப்படவில்லை என்றால் அந்நாட்டுனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் கடந்த வாரம் கூறியிருந்தார்.

  இந்நிலையில் வடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்களுடனான ஹாட்லைன் வசதி உட்பட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் இன்று நண்பகல் 12 மணி முதல் நிறுத்தப்படுவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

  இருநாடுகளுக்கிடையேயான பதற்றத்தைக் குறைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக சிலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது இரு நாடுகளுக்கிடையே பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

  ' isDesktop="true" id="302545" youtubeid="xr3dnC_UdVI" category="international">

  மேலும் படிக்க....

  BREAKING | திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kim jong un, North and south korea, North korea