ஏவுகணை சோதனை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த நிலையில்,இதற்கு பதிலடியாக ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவி மற்றொரு சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.
வட கொரியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எனினும், அந்நாட்டின் ஏவுகணை மோகம் தீர்ந்தபாடில்லை. கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை அந்நாட்டு தொடர்ந்து சோதித்து வருகிறது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனை பிற நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், அமெரிக்காவின் பொருளாதார தடையை பொருட்படுத்தாத வட கொரியா இம்மாதத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணைகளை சோதித்துள்ளது.
வட கொரியா இந்த மாதத்தில் தனது மூன்றாவது ஆயுத ஏவலில் இரண்டு ஏவுகணைகளை கடலில் வீசியதை கண்டதாக தென் கொரியாவின் இராணுவம் கூறிய நிலையில், இது தொடர்பாக செய்தியை வட கொரிய அரசு ஊடகம் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்! இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த முறை ஏவுகணைகள் ரயிலில் இருந்து ஏவி சோதனை நடத்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வட கொரியாவின் அரசு செய்தி முகமையான கே.சி.என்.ஏ, ‘ வடகொரியாவின் ரயில் ஏவுகணை படைப்பிரிவின் சார்பில் ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள், ரஷ்யாவின் இஸ்கண்டர் மொபைல் பாலிஸ்டிக் அமைப்பைப் பின்பற்றி வட கொரியாவால் வடிவமைக்கப்பட்ட ஒரு திட-எரிபொருள் குறுகிய தூர ஆயுதமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே ஜனவரி 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வட கொரியா ஏவுகணை சோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கடலுக்கு அடியில் பயங்கர எரிமலை வெடிப்பு- டோங்காவில் சுனாமி பேரலைகள் தாக்கு (வீடியோ)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.