வடகொரியா நாட்டில் திடீரென்று கோவிட் பாதிப்பு காட்டுத் தீ போல பரவத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு அந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாவல் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாள்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 கோவிட் பாதிப்புகள் பதிவானதாகவும், இதுவரை 42 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அசாதாரண சூழல் காரணமாக அங்கு சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பிராந்தியங்களுக்கும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் முதல் ஒமிக்கரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார். உலக அளவில் கோவிட் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தான் வடகொரியா தங்கள் நாட்டில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டதாக முதல்முறை ஒப்புக்கொண்டுள்ளது.
வடகொரிய நிறுவப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை சந்திக்காத பெரும் சவாலை அந்நாடு சந்தித்துள்ளதாக அதிபர் கிம் கூறியுள்ளார். உலகின் மிக மோசமான சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட நாடாக வடகொரிய உள்ளது. அந்நாட்டில், கோவிட் தடுப்பூசி இல்லை, வைரஸ் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை, அதிகளவில் பரிசோதனை செய்வதற்கான திறன் இல்லை. உலக சுகாதார அமைப்பு, சீனா போன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டியபோதும், அவற்றை வட கொரியா நிராகரித்துவிட்டது.
இதையும் படிங்க:
இனி நிலவில் விவசாயம் செய்யலாம்... சாதனை படைத்த நாசா விஞ்ஞானிகள்!
அதேவேளை, வடகொரிய அதிபர் கிம் மேலும் ஒரு அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் தொடர்ந்து எச்சரித்துவருகிறது..இந்த கோவிட் பரவலை திசைத் திருப்பக் கூட தனது அணு சோதனை திட்டத்தை கிம் வேகப்படுத்தக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.