தடுப்பூசி தேவையில்லை: கொரோனாவை எங்கள் ஸ்டைலில் எதிர்கொள்வோம் - அடம்பிடிக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

ஐக்கிய நாடுகள் சபை கொடுத்த கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு வட கொரியா மறுப்பு தெரிவித்துவிட்டது.

  • Share this:
    சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் பரவத் தொடங்கியது. சீனாவின் ஊஹான் மாகாணத்தை தீவிரமாக அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் மிக விரைவில் மற்ற உலக நாடுகளையும் ஆட்டம் காணவைத்தது. கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கிய மற்ற நாடுகள் விழிப்படைவதற்குள் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் கொரோனா பரவிவிட்டது. அதனால், அனைத்து உலக நாடுகளும் இதுவரையில் எதிர்கொண்டிராத மிகப்பெரும் பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

    கடந்த ஆண்டில் இதுவரையில் உலகம் கண்டிராத வகையில் ஒவ்வொரு நாடும் மாத கணக்கில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால், மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியது. அப்போது முடங்கிய பெரும்பாலான தொழில்கள் தற்போது வரை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இத்தனை பெரிய பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    உலக நாடுகள் அனைத்தும் திணறி நின்றன. இதுவரையில் சுமார் 22 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 45 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உண்மையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் இரண்டு மடங்கு இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். தடுப்பூசி ஒன்று தான் கொரோனாவுக்கான ஒரே தீர்வு என்று எல்லா நாடுகளும் தடுப்பூசி பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். ஆனால், ஒரே ஒரு நாடு மட்டும் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவைச் சமாளிப்போம் என்று அடம்பிடித்துவருகிறது. அந்த நாடு வட கொரியாதான்.

    உலகத்தின் கண்களுக்கு எப்போதுமே தனித் தீவாக இருக்கும் வடகொரியா கொரோனாவுக்கு பிறகு முற்றிலும் தன்னை உலக நாடுகளிலிருந்து துண்டித்துக் கொண்டது. கொரோனாவுக்கு முன்பே வடகொரியாவில் நடப்பது என்ன? என்பது உலக நாடுகளுக்குத் தெரியாது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியில் சிக்கித் திணறும்போது ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பே இல்லை என்று வடகொரியா மார்தட்டிக்கொண்டது. உலக நாடுகளுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொண்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
    அதனால், உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் சூழலுக்கும் சென்றது. இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் சபை அனுப்பி வைத்த கொரோனா தடுப்பூசி வாங்க மறுத்துவிட்டார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். கொரோனா பாதிப்புகளை நம்முடைய ஸ்டெலில் எதிர்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published: