முகப்பு /செய்தி /உலகம் / மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டிரம்ப், கிம் ஜாங் உன் இன்று சந்திப்பு!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டிரம்ப், கிம் ஜாங் உன் இன்று சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (கோப்புப்படம்)

அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (கோப்புப்படம்)

உலகின் மிகப்பெரிய தலைவர்கள் தங்கள் நாட்டில் சந்திப்பு நடத்துவது பெருமை அளிப்பதாக வியட்நாம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச அரங்கில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னும் சந்திக்கும் உச்சிமாநாடு வியட்நாமில் இன்று நடைபெறவுள்ளது.

அறிக்கை போர் நடத்திகொண்டிருந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னும் அணு அயுத குறைப்பு குறித்து சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேசினார். அவர்களின் இரண்டாவது சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற உள்ளது.

இதற்காக 65 மணி நேரம் ரயிலில் பயணித்து சீனா வழியாக வியட்நாமின் Dong Dang ரயில் நிலையம் வந்தடைந்தார் கிம் ஜாங் உன். அவரை வியட்நாமின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பள்ளி மாணவ-மாணவிகளும் கொடியசைத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் ஹனோய் சென்றடைந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நேற்றிரவு தனி விமானம் மூலம் வியட்நாம் வந்தார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மார்க்கமாக ஹனோய்யில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு டிரம்ப் சென்றார்.

இன்றிரவு இரு தலைவர்களும் ஒன்றாக இரவு உணவு அருந்த உள்ளனர். பின்னர் நாளை அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் இரு நாட்டு அதிபர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே உலகின் மிகப்பெரிய தலைவர்கள் தங்கள் நாட்டில் சந்திப்பு நடத்துவது பெருமை அளிப்பதாக வியட்நாம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளும் புதிய வரலாற்றை படைக்க வியட்நாம் சிறந்த இடமாக இருக்கும் என்று நம்புவதாகவும் ஹனோய் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

வியட்நாம் தன் ராஜதந்திர ஆற்றல்களை காண்பிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் ஆர்வமாக உள்ள இந்த நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க - வடகொரிய உச்சிமாநாடு அங்கு நடைபெறுகிறது.

மேலும் 1986 - ஆம் ஆண்டு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் உருவாகியுள்ளது.

2017-ம் ஆண்டு, ஆசிய பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு வியட்நாமில் நடந்தபோது, அங்கு சென்ற டிரம்ப், வியட்நாமை சிறப்பான இடமாக உணர்வதாக கூறினார்.

டிரம்ப் மிகவும் விருப்பும் நாடாகவும், கிம்-மின் நட்பு நாடாகவும் வியட்நாம் இருப்பதால் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இங்கு நடைபெறுகிறது.

Also see...

First published:

Tags: Donald Trump, Kim jong un