Home /News /international /

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இப்படி ஒரு குணமா? பெண் பத்திரிக்கையாளருக்கு அளித்த பிரமாண்ட பரிசு

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இப்படி ஒரு குணமா? பெண் பத்திரிக்கையாளருக்கு அளித்த பிரமாண்ட பரிசு

நெறியாளர் ரி சுன் ஹை குடும்பத்தினருடன் கிம் ஜோங் உன்

நெறியாளர் ரி சுன் ஹை குடும்பத்தினருடன் கிம் ஜோங் உன்

kim jong un: ரி சுன் ஹியை பாராட்டியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அவர் நாட்டின் ஒரு பொக்கிஷம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜோங் உன் என்றவுடன் அவரது கடுமையான தண்டனைகளும், உத்தரவுகளும்தான் நினைவுக்கு வரும், தற்கால சூழலில் சர்வாதிகார ஆட்சிக்கு  எடுத்துக்காட்டாக  கிம் ஜோங் உன்னை பலரும் குறிப்பிடுகின்றனர்.  ஆனால், அவரது சமீபத்திய செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

வடகொரியாவை சேர்ந்த ரி சுன் ஹி என்ற பத்திரிகையாளர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள அரசு தொலைக்காட்சியில்  நெறியாளராக பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தை 1994-ல் மரணம் அடைந்த தருணம் முதல் 2006-ல் வடகொரியா முதல் அணு ஆயுத சோதனை நடத்தியது வரையில் முக்கிய நிகழ்வுகளை ரி சுன் தொகுத்து வழங்கியுள்ளார்.

வடகொரிய மக்களால் நன்கு அறியப்படும் அவருக்கு, சொகுசு வீட்டை அதிபர் கிம் ஜோங் உன் பரிசளித்துள்ளார்.

இதையும் படிங்க - கடும் தட்டுப்பாடு: பெட்ரோல்-டீசல் வாங்க கட்டுப்பாடு

தலைநகர் பியோங்யங்கில், ஆற்றங்கரை அருகே உள்ள பிரமாண்ட வளாகத்திற்குள் இந்த சொகுசு வீடு அமைந்துள்ளது. இந்த வீடு பெரிய ஓட்டலைப் போன்று இருப்பதாகவும், இதற்காக தனது குடும்பம் அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரி சுன் ஹி கூறியுள்ளார்.

ரி சுன் ஹியை பாராட்டியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அவர் நாட்டின் ஒரு பொக்கிஷம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிங்க - ட்விட்டருக்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள் எலான் மஸ்க்- கோரிக்கை வைக்கும் நெட்டீசன்கள்

முன்னதாக வடகொரியாவின் முதல் அதிபரான, ஜிம் ஜோங் உன்னின் தாத்தா கிம் டூ சங்கின் 110-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அதில் உள்ள வீடுகள் வடகொரியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. இதில் பயன்படுத்தப்பட்ட ஏவுகனை அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளை நேரடியாக தாக்கும் சக்தி கொண்டவை என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் வடகொரியா அடுத்த கட்ட அணு ஆயுத சோதனையை நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Kim jong un, North korea

அடுத்த செய்தி